நம் முன்னோர்கள் சில வகையான நீர்களின் மூலம் சில நோய்களைத் தீர்க்க முடியும் என்று கண்டறிந்து எழுதி வைத்திருக்கின்றனர். அவர்கள் குறிப்பிடும் நீர்களும், அவை தீர்க்கும் நோய்களும் குறித்த தகவல்கள் தங்கள் பார்வைக்காக...
மழை நீர்
தாகம் தீர்க்கும். தேகத்துக்கு ஒளி தரும். மருந்துகளால் ஏற்பட்ட சில விளைவுகளை நீக்கும். பித்தக் கொதிப்பை அகற்றும்.
பனிக்கட்டி நீர்
பித்த சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும். குடலுக்கும் ஈரலுக்கும் வலுவைத் தரும்.
ஆற்று நீர்
உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. குறிப்பாக மேற்கிலிருந்து கிழக்காகக் கட்டுப்பாடின்றி ஓடும் ஆற்றின் நீர் உடலுக்கு வலிமையைக் கொடுக்கும்.
ஊற்று நீர்
தேகத்திலுள்ள பித்தச் சூட்டை அகற்றும். தாகத்தைத் தீர்க்கும். செரிமான சக்தியைத் தரும். குடலுக்கு வலிவைத் தரும்.
கிணற்று நீர்
குன்ம நோய்களுக்கு நல்லது.
கடல் நீர்
கபத்தை அறுக்கும். இரத்த ஓட்டத்தை மாற்றும், இந்நீரில் குளிப்பதால் மகோதரம் போன்ற வீக்கங்களைப் போக்கும்.
வெந்நீர்
மலம் இளகும். தலைவலி, ஜலதோசம், இருமல் போன்றவை குறையும்.
குளிர்ந்த நீர்
இரத்தக் கொதிப்பைக் குறைக்கும். இரைப்பை, குடல் ஈரல் போன்றவைகளுக்கு நல்லது. செரிமான சக்தி அதிகரிக்கும். பேதியை நிறுத்தும்.