நமது உடலில் பல வகையான புள்ளிகள் உள்ளது. அவை ஒவ்வொன்றிற்கும் பலவித தொடர்புகளும், நோய்களை தீர்க்கும் ஆற்றலும் இருக்கின்றன. இந்தப் புள்ளிகள் உடலில் சில முக்கிய இடத்தில் மட்டுமே உள்ளதாம்.இந்தப் புள்ளிகளில் சுமார் இரண்டு நிமிடம் மட்டும் அழுத்திப் பிடித்தால், பல வகையான மாற்றங்கள் உடலில் நடக்குமாம். உடல் சார்ந்த சில பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்கின்றனர். இதை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பரவலாக கடைபிடித்து வருகின்றனர் என்கின்றனர். இங்கு சில உடல் புள்ளிகளும், அவை நீக்கும் உடல் பிரச்சனைகளையும் பற்றித் தெரிந்து கொள்வோம்.
* உங்களின் அடிப்பாதத்தின் நடு மையத்தில் இரண்டு நிமிடம் அழுத்திப் பிடித்திருந்தால் பல வகையான நோய்கள் காணாமல் போய்விடுமாம். இந்தப் புள்ளியைச் சிறுநீரகப்புள்ளி என்றே அழைக்கின்றனர். இந்தப் புள்ளியில் அழுத்தம் தந்தால் சிறுநீரகத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியுமாம். மேலும், பசியின்மை, சோம்பேறித்தனம் ஆகியவற்றை நீக்கக்கூடிய ஆற்றல் இந்தப் புள்ளிக்கு இருக்கின்றது.
* கையில் உள்ள ஒவ்வொரு புள்ளிகளும் நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் குறிக்கிறதாம். நீங்கள் கையின் உட்பகுதியில் இரண்டு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், இதயம், நுரையீரல், தொண்டை போன்ற உறுப்புகளில் ஏற்படக்கூடியப் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன.
* ஆமணக்கு எண்ணெய்யைக் கழுத்துப்பகுதிகளில், வலி உள்ள இடத்தில் ஊற்றி இரு கைகளை கொண்டு அழுத்தி, மசாஜ் செய்தால் கழுத்து வலியிலிருந்து குணமடையலாம்.
* தலை, மூளை, கண்கள் சார்ந்த பாதிப்புகளுக்குக் கட்டைவிரலை நன்கு அழுத்தி இரண்டு நிமிடம் வரை பிடித்துக் கொண்டிருந்தால், சில நாட்களில் அந்தப் பிரச்சினைகள் நீங்கிக் குணமடையலாம்.
* உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், காலின் கீழ்பகுதியின் பின்புறத்தில் உள்ள புள்ளியில் இரண்டு முதல் ஐந்து நிமிடம் வரை அழுத்தம் தந்தால், எதிர்ப்பு சக்தி உடனடியாக அதிகரிக்கும்.
* பின்னந்தலையில் கீழ் பகுதியில் இரு கைகளைக் கொண்டு அழுத்தம் தந்தால் உளவியல் சார்ந்த பிரச்சினைகள் பல தீர்ந்து விடும். மேலும், இரவில் நிம்மதியான தூக்கமும் வரும்.
* தொப்புளுக்கு மூன்று செ.மீக்குக் கீழாக இருக்கும் புள்ளியில் இரண்டு நிமிடம் அழுத்தம் தந்தால், மலச்சிக்கல் பிரச்சினை, செரிமான கோளாறு போன்றவைகளில் இருந்து விடுபடலாம்.
* நடுவிரலை ஐந்து நிமிடம் இழுத்து பிடித்திருந்தால், பயம், தயக்கம், நடுக்கம் ஆகியவற்றைச் சரி செய்துவிடும். மேலும், நல்ல மன ஓட்டத்தைப் பெறலாம்.
* காலின் பெருவிரலுக்கும், நடுவிரலுக்கும் இடையில் உள்ள இடத்தில் இரண்டு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், தலைவலி, பாதவலி போன்ற பல வலிகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.