* வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி, கட்டிகளின் மேல் பற்றாகப் போட்டு வைக்க கட்டிகள் சீக்கிரத்தில் பழுத்து உடையும்.
* வெற்றிலைக் கொடியின் வேரைச் சுவைத்து விழுங்க குரலின் ஒலி சிறக்கும்.
* வெற்றிலைச் சாற்றோடு சம பங்கு இஞ்சிச் சாறும் தேனும் கலந்து உள்ளுக்குக் கொடுக்க சுவாச அறை கோளாறுகள் அத்தனையும் குணமாகும்.
* திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்தோடு, வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து உள்ளுக்குக் கொடுக்க ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோய், நெஞ்சுச்சளி, இருமல் குணமாகும்.
* பாம்பு கடித்தவர்களுக்கு உடன் வெற்றிலைச் சாறு பருகக் கொடுப்பதால் விஷம் முறிந்து குணமாகும். இதனாலேயே இதற்கு நாகவல்லி என்று மற்றொரு பெயரும் இருக்கிறது.
* வெற்றிலைச்சாற்றில் சிறிது கற்பூரம் சேர்த்து லேசாக சூடு செய்து வெதுவெதுப்பான நிலையில் நெற்றிப் பொட்டுகளின் மேல் தடவ தலைவலி விலகும்.
* இரவு படுக்கும் முன் 2 தேக்கரண்டி வெற்றிலைச் சாற்றுடன் சிறிது ஓமத்தைப் பொடித்துச் சேர்த்துக் குடித்து வர மூட்டுவலி, எலும்பு வலி ஆகியன குணமாகும்.
* வெற்றிலையை நெருப்பில் காட்டி வதக்கி, அடுக்காக ஒன்றின் மேல் ஒன்றாக மார்பின் மேல் வைத்துக் கட்டுவதால் தாய்ப்பால் நன்கு சுரப்பதோடு, குழந்தை சரியாகப் பால் குடிக்காத போது பால் கட்டிக் கொண்டு மிக்க வேதனை தரக்கூடிய மார்பகக் கட்டியும் கரைந்து நலம் செய்யும்.
* வெற்றிலைச்சாறு ஒரு பங்கும் தண்ணீர் இரண்டு பங்கும் சேர்த்து அன்றாடம் பருகி வர சிறுநீர் நன்கு வெளியேறும்.
* மூன்று வெற்றிலையைச் சாறு பிழிந்து, அத்தோடு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் ஒருமுறை பருகி வர நரம்புகள் பலம் பெறும்.
* வெற்றிலையைக் கடுகு எண்ணெய் விட்டு லேசாக வதக்கி, வெதுவெதுப்பான சூட்டில் மார்பில் பற்றாகக் கட்டி வர மூச்சுத்திணறல் மற்றும் இருமல் குணமாகும்.
* ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து, சிறிது தணலில் காட்டி கசக்கிப் பிழிய வருகிற சாற்றினில், பத்து துளிகள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்க சளி, இருமல், குணமாகும். நெஞ்சுச்சளி கரைந்து மலத்தோடு வெளியேறும்.
* வெற்றிலை வலியைப் போக்கக்கூடியது என்பதாலும் வீக்கத்தைத் தணிக்கக்கூடியது என்பதாலும் வெற்றிலையை மைய அரைத்து கீல்வாதம், விரைவாதம் ஆகியவற்றுக்கு மேல் பற்றாக வைத்துக்கட்டலாம்.
* தலை பாரம் கண்டு தலைவலி ஏற்படும் போது வெற்றிலைச் சாற்றை 3 துளிகள் மூக்கினில் விட்டு உறிஞ்சுவதால் தலை பாரம் குறையும்.
* உடலில் தீப்பட்டதால் காயங்கள் ஏற்பட்ட போது இளம் வெற்றிலையை தீக்காயங்களின் மேல் வைத்துக் கட்ட விரைவில் புண்கள் ஆறும்.
* சிறு குழந்தைகளுக்கு மலக்கட்டு ஏற்பட்டு வேதனையுறும் போதும், வயிற்றுப் பொருமல் வலி ஆகியன வந்த போதும், வெற்றிலைக் காம்பை விளக்கெண்ணெயில் நனைத்து ஆசன வாயினுள் நுழைத்து வைக்கச் சிறிது நேரத்தில் மலம் வெளிப்பட்டு குழந்தையின் வயிற்றுத் தொல்லைகள் போகும்.
* இரண்டு அல்லது மூன்று வெற்றிலையுடன் 5 மிளகு சேர்த்து தேநீர் வைத்துக் கொடுக்க செரியாமை நீங்கும். 50 மி.லி.
* தேங்காய் எண்ணெயில் 6 வெற்றிலையைப் போட்டு கொதிக்கவிட்டு இலை நன்றாகச் சிவந்து பொரிந்ததும் எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படை ஆகியவற்றின்மேல் தடவி வர விரைவில் குணம் உண்டாகும்.