|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
2 |
|
a |
|
சிறுகதை-45 பச்சை ரிப்பன் பார்சல்! -ராம்ப்ரசாத்.
மரத்தாலான சிறிய டீபாயில், ஒரு சிறிய கோப்பையில் இருந்த தேனீரை யாருடைய முன் அனுமதியுமின்றி ஆற்றிக் கொண்டிருந்தது மாலை நேரத் தென்றல் காற்று. அந்த ஆறிக் கிடந்த டீக்கோப்பையில் தளர்ந்திருந்த மனநிலையுடன் தொடர்ந்திருந்தது 60 வயது ராமச்சந்திரன்தான். ராமச்சந்திரன், மங்களம் தம்பதிக்கு மூன்று பெண்கள். மூத்தவள் பிரியா அழகானவள், 30 வயதுக்காரி. திருமணமாகி 5 வயது மகளுடன் இருக்கிறாள். பி.காம் படித்தவளானாலும் புகுந்த வீட்டில் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டபடியால் வேலைக்குச் செல்லவில்லை. முதல் பெண் திருமணம் என்பதால், ராமச்சந்திரன் செலவு பற்றிப் பார்க்காமல் தடபுடலாய் செய்தார். அதனால் நிறைய பாடங்கள் கற்க நேர்ந்தது. இந்த திருமணங்கள், ஒவ்வொரு முறையும் புதிதாக பாடங்கள் கற்றுக் கொடுக்கத் தவறுவதே இல்லை. யாரொருவர் அனேக திருமணங்களை நடத்தியிருக்கிறாரோ, அவரிடமிருந்து கற்றுக் கொள்ள அந்த பாடங்கள் இருக்கும். அடுத்தவர் திருமணங்களில் இம்மாதிரியான பாடங்கள் ஒரு வகையில் லாபம், கூடமாட ஒத்தாசை செய்பவருக்கு.
இரண்டாமவள் சந்திரிகா, மூத்தவள்
அளவுக்கு அழகில்லை என்றாலும் அடுத்த நிலை அழகு. அவளும் பி.காம் படித்திருந்தாள்.
வயிற்றுப் பிள்ளைக்காரி. பிரசவம் இப்போதோ அப்போதோ என்றிருக்கிறது. சென்ற வருடம்
தான் திருமணம் செய்து வைத்தார். மூத்தவளின் திருமணத்தில் கற்ற பாடங்களில் சற்றே
சுதாரிப்புடன் தான் செய்தார் சந்திரிகாவின் திருமணத்தை.
நாளை மீதான பயம், என்ன நடக்குமோ
என்பதில் இருக்கும் ஒரு தெரியாத தன்மை, எக்குதப்பாக ஏதாவது நடந்துவிட்டால்
தன்மானத்தையும், சுயகவுரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்,
அதற்குத் தேவை செல்வம், இந்த எண்ணமே செல்வத்தைப் பதுக்குவதில் முடிகிறது. மனிதன்
எப்போது மனிதத்தின் மேல் நம்பிக்கை வைக்க மறந்தானோ, மனிதத்தை புரிந்து கொள்ள
மறந்தானோ, இயற்கை இதுதான் என்றும், இயற்கையை இப்படித்தான் கையாள வேண்டும் என்று
தான் நினைத்த தவறான ஒன்றை ஆணித்தரமாக நம்பத் தொடங்கினானோ அப்போதுதான்
தொடங்கியிருக்க வேண்டும் இது போன்ற முகமூடித்தனங்கள். அந்த முகவரி உசைனின் வீடு. உசைனுக்கு நன்றாக நினைவில் இருந்தது. ராமச்சந்திரனைப் பார்த்ததும் கண்டு கொண்டார். கைப்பற்றி வரவேற்று அமர வைத்து, குடும்பத்தினர் அனைவரையும் அறிமுகப்படுத்தினார். மிகவும் நெகிழ்ந்தார். ராமச்சந்திரன் தன்னை காப்பாற்றியிராவிட்டால் தானே இல்லை என்பது போல் பேசினார். பேச்சுக்கள் வெகு நேரம் தொடர்ந்தது. மஞ்சுளாவின் திருமணம் பற்றி பேசினார். பேச்சு வாக்கில், உசைன் வைத்திருப்பது ஒரு ஷாப்பிங் காம்பிளக்ஸ் என்றறிந்தது சற்றே ஏமாற்றமளித்தது. மஞ்சுளாவின் திருமணம் பற்றி அறிந்த உசைன் தானே உதவுவதாகவும், தன்னைக் காப்பாற்றியதற்கு கைமாறாக செய்ய நினைப்பதாகவும் சொன்னார். ஒரு வாரத்தில் 35 சவரனுக்கான பணத்தை தருவதாக வாக்களித்தார் உசைன். ராமச்சந்திரன் நெகிழ்ந்தே போனார். ஒரு வாரம் கடந்தது. தன் வீட்டில் வைத்து 4 லட்சம் ரூபாயை ராமச்சந்திரனுக்கு அளித்தார் உசைன். திருப்பித்தர வேண்டியதில்லை எனவும், மஞ்சுளா தனக்கும் மகள் தானென்றும் மஞ்சுளா திருமணத்தில் குடும்ப சகிதம் சந்திப்பதாகவும், திருமணத்திற்கான வேலைகளை மேற்கொண்டு கவனிக்கும்படியும் சொல்லியனுப்பினார். ராமச்சந்திரன் பஸ்ஸில் வீடு திரும்புகையில் மழை ச்சோவென பெய்யத் தொடங்கியிருந்தது. ராமச்சந்திரனுக்கு ஏனோ அன்றைய மழை உசைனின் நிமித்தம் பெய்கிறதோ என்று பட்டது.
வீடு நுழைந்ததும் சந்திரிகாவின்
அழும் குரல் சன்னமாக கேட்டுக் கொண்டிருந்தது. சந்திரிகாவின் வீட்டுல்
எல்லோரும் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்த போது பீரோ புல்லிங் கும்பலால் அவள்
பீரோவில் இருந்த 35 சவரன் நகை திருடு போயிருந்ததை அழுகையுடன் சந்திரிகா
விளக்கிக் கொண்டிருக்க மங்களமும், மஞ்சுளாவும் தேற்றிக் கொண்டிருந்தனர்.
அங்கே உசைன் தன் ரூமில் தொலைப்பேசியில் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.