-
உலகின் எப்பகுதியில் இருப்பவரும்
முத்துக்கமலம் இணைய இதழுக்குத் தமிழில் படைப்புகளை அனுப்பலாம்.
-
முத்துக்கமலத்திற்கு அனுப்பும் படைப்புகள்
பிற இணைய இதழ்களில் வெளியிடப்படாததாக இருக்க வேண்டும்.
-
முத்துக்கமலம் இணைய இதழில் வெளியாகும்
அனைத்துப் படைப்புகளுக்கும்
அதன் படைப்பாளர்களே முழுப் பொறுப்பு என்பதுடன்
படைப்புகள் யாருடைய மனதும் புண்படாதவாறு இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து
படைப்புகளை அனுப்ப வேண்டும்.
-
படைப்புகளை மின்னஞ்சல் மூலமாகப் பயன்படுத்திய
தமிழ் எழுத்துரு (Tamil Font) குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். படைப்புகள் தமிழ்
ஒருங்குறி எழுத்துரு (Tamil Unicode Font) கொண்டு அனுப்புவது
விரும்பப்படுகிறது.
படைப்புகளைப் படங்களுக்கான வடிவில் (Picture Image) அனுப்புவதைத் தவிர்க்க
வேண்டுகிறோம்.
-
முத்துக்கமலம் இணைய இதழ் மாதமிருமுறையாக,
ஆங்கிலத்தேதி 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் புதுப்பிக்கப்படுவதால்
புத்துப்பித்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பாகக் கிடைக்கும் படைப்புகள்
மட்டுமே பரிசீலிக்கப்படும். தாமதமாகக் கிடைக்கும் படைப்புகள் அனைத்தும்
அடுத்து வரும் புதுப்பித்தலுக்கே பரிசீலிக்கப்படும்.
-
தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் அனைத்தும்
முத்துக்கமலம் இணைய இதழில் அடுத்து வரும் புதுப்பித்தலில் இடம் பெறும். இரண்டு
மாத காலத்திற்குள் இடம் பெறாவிடில் படைப்பு நிராகரிக்கப்பட்டதாகக் கொள்ள
வேண்டும்.
-
முத்துக்கமலம் இணைய இதழுக்கு அனுப்பப்படும்
படைப்புகளைப் பிற இணைய இதழுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். ஒரே படைப்பு
பல இணைய இதழ்களில் இடம் பெறுவதை முத்துக்கமலம் விரும்புவதில்லை. அப்படி ஒரே
படைப்பு பிற இணைய இதழ்களிலும் வெளியிடப்படும் நிலையில் அப்படைப்பாளரின்
படைப்புகள் வெளியிடுவது நிறுத்தப்படும்.
-
இது போல் முத்துக்கமலம் இணைய முகவரி தவிர
பிற இணைய முகவரிகள் மின்னஞ்சலில் காணப்பட்டாலும், அடையாளம் காட்டப்படாத
மின்னஞ்சல்கள் எனக் குறிப்பிடப்பட்டாலும் அந்தப் படைப்பு பரிசீலிக்கப்படாமலேயே
நிராகரிக்கப்படும்.
-
முத்துக்கமலத்தில் வெளியிடப்படும் படைப்புகள்
அனைத்தும் அதன் படைப்பாளர்களுக்கு முழு உரிமையானது. இருப்பினும்
தமிழ் இணையப் பயன்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனும் நோக்கத்தில்
முத்துக்கமலம் இணைய இதழில் இருந்து
மீள்பதிவு* செய்து கொள்ளும் அனுமதிக்குக்
கட்டுப்பட வேண்டும்.
-
முத்துக்கமலம் இணைய இதழுக்கு அனுப்பப்படும்
படைப்புகளை வெளியிடவோ அல்லது நிராகரிக்கவோ ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு. மேலும் படைப்புகளைப் படைப்பாளரின்
கருத்துக்கள் மாறாதபடி முத்துக்கமலம் இணைய இதழுக்கு ஏற்றவாறு சுருக்கவோ,
திருத்தம் செய்யவோ ஆசிரியருக்கு முழு உரிமையுண்டு.
-
முத்துக்கமலம் இணைய இதழில் வெளியாகும்
படைப்புகளுக்கு தற்சமயம் பரிசாக எதுவும் வழங்க முடியவில்லை.