........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சிறுவர் பகுதி-29          கதை.

பொது எதிரி வரும் பொழுது...

மைனா குருவி அழகாக இருக்கும். சின்னத் தலையை ஆட்டி ஆட்டி நடக்கும். மிளகு போன்ற கண்கள் இருப்பதே தெரியாது. மஞ்சள் வண்ண அலகால் புழுவைக் கொத்திப் பிடிக்கும். வாயைத் திறந்து கொண்டு, சின்னக் கால்களால் தத்தித் தத்தி நடக்கும்.

தோட்டத்தைச் சுற்றிலும் மைனாக்குருவிகள் கூ..கூ.. என்று கத்திக் கொண்டே அங்கும் இங்கும் நடந்தன. பறந்தன. ஒரு குருவி பறந்தால் அனைத்துக் குருவிகளும் பறந்தன.

திடீரென அனைத்துக் குருவிகளும் கீச்.. கீச்.. என்று சத்தமிட்டபடி ஒரு குருவியைக் கொத்த ஆரம்பித்தன. அந்த ஒரு குருவியின் தலைமயிர் சிலிர்த்து இருந்தது. எதிர்த்துப் போராடியது. அந்த ஒரு குருவியை ஒவ்வொரு குருவியும் மாற்றி மாற்றிக் கொத்தியது. அந்தக் குருவியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

என்ன நடக்கிறது என்று பார்க்க அருகில் சென்ற பொழுது, அனைத்துக் குருவிகளும் பறந்தோடின. கொத்திக் கொண்டிருந்த குருவியையும் அழைத்துக் கொண்டு பறந்தோடின. ஒரு குருவி கூட இருக்கவில்லை.

தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த குருவிகள், பொதுவான எதிரி வருவதைக் கண்டதும், ஒன்றாகச் சேர்ந்து தப்பி ஓடியது வியப்பாக இருந்தது.

பொது எதிரி வரும் பொழுது நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்கிற உயரிய உண்மையை அந்தச் சின்ன மைனாக் குருவிகள் வழியாக அறிய முடிந்தது.

-பொள்ளாச்சி நசன்.

(நன்றி: www.thamizham.net)

முந்தைய சிறுவர் பகுதிக்குச் செல்ல

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.