........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சிறுவர் பகுதி-31          கதை.

 வயிற்றுப் பிழைப்புக்காக...

குரங்குக் குட்டி பல்லைக் காட்டி அனைவரையும் மிரட்டியது. குரங்குக்குட்டிக்கு ஒல்லியான கைகளும், கால்களும் இருந்தன. தனது நீண்ட வாலால் மரத்தின் கிளையைப் பிடித்துக்கொண்டு தலைகீழாகத் தொங்கியது. தலையில் அலுமினியப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு ஆடி ஆடி நடந்தது.

குரங்காட்டி குரங்குக்குட்டியின் இடுப்பில் கயிற்றைக் கட்டியிருந்தான். கயிற்றைச் சுண்டியிழுத்த பொழுதெல்லாம் குரங்குக் குட்டி, குட்டிக் கரணம் அடித்தது. குரங்காட்டி பாடினால், குரங்குக்குட்டி ஆடியது.

பார்த்துக் கொண்டிருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காசுகளை விரித்திருந்த துணியில் போட்டனர்.

குரங்குக் குட்டி காசு ஒன்றை எடுத்துக் கடித்துப் பார்த்தது. காசை அதனால் தின்ன முடியவில்லை. குரங்காட்டியைப் பார்த்தது. குரங்காட்டி பையிலிருந்து ஒரு வாழைப்பழத்தை எடுத்து குரங்குக் குட்டிக்குக் கொடுத்தான். குரங்குக்குட்டி மகிழ்வோடு தின்றது.

குரங்காட்டி காசுகளை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு நடந்தான்.

குரங்குக் குட்டி ஆடுவது பழத்துக்காக, குரங்காட்டி பாடுவது காசுக்காக...

மொத்தத்தில் அவர்கள் ஆட்டமும் பாட்டும் அவர்களது வயிற்றுப் பிழைப்புக்காக...

-பொள்ளாச்சி நசன்.

(நன்றி: www.thamizham.net)

முந்தைய சிறுவர் பகுதிக்குச் செல்ல

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.