........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சிறுவர் பகுதி-53    -கதை

அரசன் ஆனையும் பூனையும் தின்பவனா?

அரசனைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்றுச் செல்ல புலவர் ஒருவர் அரசவைக்குள் நுழைந்தார்.

அங்கு சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அரசரைப் பார்த்து, "பாராளும் மன்னனிவன் ஆனையும் தின்பான்; பூனையும் தின்பான்" என்றார்.

அரசனுக்கு அதிர்ச்சி. "நிறுத்தும் புலவரே! இதுதான் புகழ்ந்து பாடும் லட்சணமா?" என்று கோபமுற்றார்.

அதற்குப் புலவர், "அரசே கோபமடையாதீர்கள். தாங்கள் ஆ+நெய் அதாவது பசுவின் நெய்யையும், பூ+நெய் அதாவது பூவிலிருந்து கிடைக்கும் தேனையும் உண்பீர்கள் என்றுதான் சொன்னேன். தவறு இருப்பின் வருந்துகிறேன்" என்றார்.

அரசன் கோபம் குறைந்து அந்தப் புலவருக்குப் பரிசு அளித்து மகிழ்ந்தான்.

  முந்தைய சிறுவர் பகுதிக்குச் செல்ல

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.