........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a

a
 

அறிவிப்புகள்

வரவேற்கப்படுகின்றன...!

இந்த இணைய இதழில் வெளியாகி உள்ள அனைத்து படைப்புகள் குறித்தும் தங்களிடமிருந்து கருத்துகள், விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன. இந்த இணைய இதழில் தாங்கள் விரும்பும் மாற்றங்கள் குறித் ஆலோசனைகளையும் கூட  எங்களுக்கு வழங்கலாம். கடிதத்தில் உங்கள் ஊர், நாடு போன்றவற்றை குறிப்பிடுங்கள்.

-ஆசிரியர் குழுவினர்

e-mail to    : msmuthukamalam@yahoo.co.in

தபால் வழியாக அனுப்ப விரும்புபவர்கள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

எம். சுப்பிரமணி,
(ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ்)
19/1, சுகதேவ் தெரு,
பழனிசெட்டிபட்டி,
தேனி - 625 531.
தமிழ்நாடு, இந்தியா.
கைத்தொலைபேசி:+ 91-9940785925.

உங்கள் கருத்துக்கள் கீழே...

 

ஆன்மீகம்

 

பகுத்தறிவு

 

பொன்மொழிகள்

 

அடையாளம்

 

கதை

 

கட்டுரை

 

கவிதை

 

குட்டிக்கதை

 

சிரிக்க சிரிக்க

 

சிறுவர் பகுதி

 

மகளிர் மட்டும்

 

சமையலறை

 

மனம் திறந்து

 

புத்தகப் பார்வை

 

கல்லூரி வாசல்

 

குறுந்தகவல்

 

மருத்துவம்

 

கிறுக்குத்தனம்

 

குறும்புகள்

 

விவாதக்களம்

 

தமிழ் வலைப்பூ

 

உதவிக்களம்

 

சுவையான தீர்ப்புகள்

 

நிகழ்வுகள்

 

கிடைக்கப் பெற்றோம்

 

உங்கள் கருத்து

 

ஆசிரியர் குழு

 

விளம்பரம் செய்திட

a
a
உங்கள் கருத்துகள்  உங்கள் கருத்துகள  உங்கள் கருத்துகள்  உங்கள் கருத்துக உங்கள் கருத்துகள்

பிராவினால் பிராப்ளம்

தவறான பிராக்களால் ஏற்படும் பிராப்ளம் அறிந்து சரியான பிரா அணிய  வழிகாட்டும் விதமாக "பிரா - அறிய வேண்டிய உண்மைகள்" கட்டுரை இருந்தது. இது குறித்து யாரிடம் கேட்கலாம் என்றிருந்த நிலையில் எனக்குப் பயனளிக்கும் விதமாக முத்துக்கமலம் வெளியிட்டிருந்தது மகிழ்ச்சிக்குரியது.

-எம்.ராஜராஜேஸ்வரி, சென்னை-4.

தமிழறிஞர்களுக்கு அவமானம்

சில விசயங்களை பதிவு செய்துதான் ஆகவேண்டும். சில விசயங்களை சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும். தங்களுக்கு நேர்ந்த மனக்கசப்பு - தமிழறிஞர்களுக்கு நேர்ந்த அவமானம். தங்களுடைய வெளிப்படையான போக்கு - மன உறுதிக்குப் பாராட்டுக்கள்.

-கவிஞர். வதிலைபிரபா
தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்
வத்தலகுண்டு.

ஒரு வழிப்பாதை இது...!

நம் குழந்தை நல்ல முறையில் வளர்ந்து நமக்குப் பின்னால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் அனைத்துப் பெற்றோர்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இன்றைய சூழலில் பிள்ளைகள் வளரும் போக்கு பெற்றோர்களின் எண்ணத்திற்கு ஈடாக இருப்பதில்லை. ஏதோ பிறந்தோம், பணம் சம்பாதிக்க வேண்டும், வாழும் காலத்தை மகிழ்ச்சியாய்க் கழிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஒரு வழிப்பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப்பாதை எங்கே போய் முடியுமோ? சந்தியா கிரிதர் சொல்வது போல் பள்ளியில்தான் என்றில்லை. பல இடங்களிலும் பண்பறியாத நிலையே... 

-எம். செந்தில்குமார், சென்னை.

a

நல்ல செய்திகளைத் தேடி...

என் சிறு வயதில் நல்ல தங்காள் கதை கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நல்ல தங்காளுக்கு ஒரு கோயில் அமைக்கப்பட்டிருப்பதை தங்கள் முத்துக்கமலம் இணைய இதழ் மூலம் அறிந்து கொண்டேன். நல்ல செய்திகளை தேடி வழங்கும் முத்துக்கமலத்திற்கு என் வாழ்த்துக்கள்.

-ஆர். செல்வலட்சுமி, சென்னை-17.

எங்கிருந்து கிடைக்கிறது?

முத்துக்கமலத்தில் வெளியாகும் குட்டிக்கதைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. இந்தக் குட்டிக்கதைகள் எல்லாம் எங்கிருந்துதான் தங்களுக்குக் கிடைக்கிறதோ? உண்மையில் உங்கள் தேடுதலுக்கும் உழைப்பிற்கும் பலன் நிச்சயம் கிடைக்கும்.

-எஸ்.சதீஷ்குமார், வெண்டையம்பட்டி.

நாட்டுப்புறக் கலைகளைக் காப்பாற்ற...?

முத்துக்கமலத்தில் வெளியான நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான கரகாட்டம் காணாமல் போகிறது என்கிற தகவல் முற்றிலும் உண்மை. இன்று தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு நாட்டுப்புறக் கலைகளை ரசிக்கவோ அல்லது வாழ வைக்கவோ விருப்பமில்லை. இதுபோன்ற கலைகளைக் காப்பாற்ற அரசு முன்வர வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஊக்கமளித்து வரும் சங்கமம் நிகழ்வுகளைப் போல் அரசு விழாக்களிலும் இவர்கள் பங்களிக்க வழிவகை செய்ய வேண்டும்.

-தூத்துக்குடி பாலு, கோவில்பட்டி.

வாழ்த்துக்கள்...!

முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியருக்கு "தமிழ்த்திணை விருது". முத்துக்கமலம் வாசகர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி. விருது பெற்ற தேனி. எம். சுப்பிரமணிக்கு எங்கள் இனிய நல்வாழ்த்துக்கள்.  விருது வழங்கிய தமிழ்த்திணை மற்றும் சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் அமைப்புகளுக்கு எங்கள் நன்றி.

-சுபஸ்ரீஸ்ரீராம், பஹ்ரைன்.
நெல்லை விவேகநந்தா.
எம்.செந்தில்குமார், சென்னை.
எம்.ரமேஷ், சென்னை.
எஸ்.கார்த்திகேயன், அபுதாபி.
பேராசிரியர் செல்வக்குமார், கனடா.
பரிதிமதி, சென்னை.
சுந்தர்,பெங்களூர்.
அ.ரவிசங்கர், கோயம்புத்தூர்.
வே.கலைவாணன், சின்னமனூர்
வேதா இலங்காதிலகம், டென்மார்க்.

a

முத்துக்கமலம் புதுப்பிக்கப்படவில்லையே...

முத்துக்கமலம் இணைய இதழ் கடந்த 01-06-2010 அன்றிலிருந்து புதுப்பிக்கப்படாமல் இருக்கிறதே. ஒரு நல்ல இணைய இதழ் நின்று விடக் கூடாது. தொடர்ந்து புதுப்பித்திட வேண்டுகிறேன்.

-சுபஸ்ரீஸ்ரீராம்,
பஹ்ரைன்.

முத்துக்கமலம் புதுப்பிக்கப்படாதது ஏன்?

எவ்விதக் குறைபாடுகளுமில்லாமல் மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வந்த முத்துக்கமலம் இணைய இதழ் தற்போது புதுப்பிக்கப்படாமல் இருக்கிறதே... விரைவில் புதுப்பித்து எங்களைப் போன்ற புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

-சந்தியா கிரிதர், புதுடெல்லி.

(கணிப்பொறியில் ஏற்பட்ட பழுதும் அப்பழுதை நீக்க ஏற்பட்ட கால தாமதமும் முத்துக்கமலம் இதழைக் குறிப்பிட்ட காலத்தில் புதுப்பிக்க முடியவில்லை. இனி இத்தவறு நடக்காமல் இருக்க அதிகக் கவனம் கொள்ளப்பட்டுள்ளது. -ஆசிரியர்)

முருகன் அருள் கிடைக்கட்டும்!

முருகனின் அறுபடை வீடுகளில் திருத்தணிகை பாலசுப்பிரமணிய கோயில் குறித்த முழுமையான செய்திகள் அடங்கிய கட்டுரை அருமையாக இருக்கிறது. இக்கட்டுரைக்கான படங்களும் மிக அழகாக இருக்கின்றன. முத்துக்கமலத்திற்கு முருகன் அருள் கிடைத்திட என் இனிய வாழ்த்துக்கள்.

-எம்.செந்தில்குமார், சென்னை.

முருகன் அருள் கிடைக்கட்டும்!

முத்துக்கமலத்தில் தற்போது சமையலறைச் செய்திகள் அதிகமாகி வருகிறதே. தங்கள் இதழுக்கு வரும் இலக்கியப் படைப்புகள் குறைந்து போயிருக்கிறதா? இலக்கியத்தில் மட்டும் அதிகக் கவனம் செலுத்தலாமே...? மிகச் சிறப்பாக இருக்கும் என நான் கருதுகிறேன். உங்கள் கருத்து எப்படி?

-முனைவர்.துரை.மணிகண்டன், திருச்சி.

(தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. முத்துக்கமலத்திற்கு படைப்புகள் அதிக அளவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. முத்துக்கமலம் இதழ் பல்சுவை இதழாக இருப்பதால் அனைத்துச் செய்திகளும் இடம் பெறவே கவனம் கொள்ளப்படுகிறது. மேலும் முத்துக்கமலத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க வசதியாக சமையலறைச் செய்திகள் கூடுதலாக வெளியிடப்பட்டு வருகின்றன. இலக்கியத்திற்கும் இங்கு இடமுண்டு. -ஆசிரியர்)

முந்தைய கருத்துக்கள் அறிய

 

a
 உங்கள் தேடுதலை இங்கே துவங்குங்கள்
Google Enter your search terms Submit search form

முகப்ப

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.