|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
|
a |
|
|
a |
|
|
விவாதக்களம்-14
தற்கொலை முயற்சிக்குக் காரணம்
அதிகமான
தேவைகளே! தோல்விகளே!
( தலைப்பு தந்த வாசகர்:
கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி.)
|
|
|
as |
|
தேவைகளே! அதிக தேவைகள், அதிக தொல்லைகள். மனிதனின் ஆசைகள் அதிகரிக்கும் போது அவனுடைய தேவைகளும் அதிகமாகிறது. அதிகமான தேவைகளை நோக்கிச் செல்லும் போது ஏற்படும் தடைகளை உடைக்க எந்தத் தவறையும் செய்யத் துணியும் மனிதன் அந்தத்தவறு வெளியில் தெரியவரும் பொழுது அதை நினைத்து வெட்கப்படுகிறான், வேதனைப்படுகிறான். முடிவில் தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வது என்கிற முடிவில் தற்கொலைக்குத் தயாராகி விடுகிறான். அதிகமான தேவைகள், அதிகமான தொல்லைகள் என்பதை உணராதவர்கள்தான் அதிகமாகத் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள்.
-எஸ்.கார்த்திகேயன்,
துபாய்.
|
தோல்விகளே! மாற்று வழிகளைத் தேட வேண்டும். வாழ்க்கையில் பல முயற்சிகள் செய்தும் அதில் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்கும் சிலர் வாழ்க்கையில் விரக்தி அடைகின்றனர். தங்கள் இயலாமையை நினைத்து தற்கொலை முயற்சிக்கும் செல்கின்றனர். இந்தியத் தண்டனைச் சட்டம் 309வது பிரிவு தற்கொலை முயற்சியை சட்டவிரோதமாகக் கருதி இதற்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை அளிக்கிறது. இருந்தாலும் தற்கொலை முயற்சிகள் குறைவதாக இல்லை. இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 13 பேர்கள் தற்கொலை செய்கின்றனர். வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்தித்தவர்களுக்கு கடைசியாக எடுத்த தற்கொலை முயற்சியும் தோல்வியடையும் போது அவர்களுக்கு தண்டனை என்பது அவர்களை மேலும் பாதிக்கும் என்பதால் அவர்களுக்கு தகுந்த உளவியல் சிகிச்சை அளித்தால் நன்றாக இருக்கும். இதை இந்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு மாற்று வழிகளைத் தேட வேண்டும்.
-உ. சரவண சுப்பையா, கோயம்புத்தூர். |
இது முடிவல்ல... ... ... மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ... - ஆசிரியர் குழுவினர். |
|
|
|
| முகப்பு | |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.