........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:187

காதலைத் தந்து விடு...

என்னவென்று சொல்வேன்
என் தவிப்பை...

மையுண்ட விழியிரண்டை
மங்கையிவள் கொண்டுள்ளாள்...
இருவிழியிலும்
இருவித பார்வையெனில் மிகையில்லை

விந்தை என்பேனோ
விநோதம் என்பேனோ

பணியைத் திரட்டி - இள
மேனி செய்தனளோ
பார்வையின் எழில்தனை
பருகிநின்றேன் நான் விழியால்...

நெடுங்கயல் கண்ணழகி
நோய் ஒரு பார்வை என்னைப் பார்த்தாள்...

நிலவின் மடியில்
நெருப்பை மூட்டி - என்
நெஞ்சில் திணித்ததுப் போல்
ஒரு பார்வையால் என்னுள்
ஓராயிரம் காதல்நோய் தந்தாள்...

காதல் நோயால் - நான்
கடுந்துன்பம் கொண்டேன்...
உண்ணவுமில்லை...உறங்கவுமில்லை...
பெண்ணவளை நினைத்து
பெரும்பொழுதோடு சண்டை செய்கிறேன்...

என்னைக் கண்டவரெல்லாம் - பெரும்
பித்தனென்றனர்...

கண்வீச்சென்றால்
காதல்நோய் செய்தவளே
இன்னொரு பார்வை செய்து
ஏந்திழையே
என்னிதயத்தைத் தாலாட்டு...
கண்மணியே - உன்
காதல் பார்வைக்காக
காத்திருப்பேன் சாகும்வரை...

இருபார்வை உன்னிடமுண்டு!
ஒருபார்வையால் காதல்நோய் தந்தாய்
இன்னொரு பார்வையால்
காதலைத் தந்துவிடு...! 

-ஆர்.கனகராஜ்.

 
m

 

ஆர்.கனகராஜ் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.