........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:196

உலக உருண்டை உடையாமல்... 

வருடமொரு முறை
வருவதோ தீபாவளி! -சிறியோர்
வண்ண வண்ண பூவெடி
வெடிப்பானே வான்வெளி!

வருட மெல்லாம்
வெடிக்குதே குண்டுவெடி! -வீதி
வந்தோரும் போவோரும்
மடிவதேன் அய்யோகதி!

ஒருதடவை வாழ்க்கையிது!
ஒற்றுமையை கையிலெடு!
உன்னிலும் என்னிலும்
ஓடுவது குருதியன்றி வேறெது!

அனுபவிக்க எத்தனையுண்டு
அன்பென்ற ஆயுதத்தை
அடிநெஞ்சில் நீவைத்தால்
ஆகாயம் உன்னருகில்!

உன்னுருவும் என்னுருவும்
ஒன்றென ஒத்துக்கொள்வோம்!
உலக உருண்டையை
உடையாமல் பார்த்துக்கொள்வோம்! ! 

-கலை , கலிபோர்னியா.

 
m
 

கலை அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.