........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-19 எல்லாம் அவன் பார்த்துக்குவான்!
-தாமரைச்செல்வி.
என் குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப பள்ளிப் பேருந்து
நிற்கும் முக்கியச் சாலைக்குச் சென்ற பொழுது என் காதில் வந்து விழுந்தது அந்த
வாசகம்.
எல்லாம் அவன் பார்த்துக்குவான்.
அங்கே, தனக்கு மட்டும் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து
கொண்டிருப்பதாகவும், தனக்கு மட்டும் ஏன் இப்படி வருகிறது? என்றும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த ஒருவருக்கு அவருடன் இருந்த நண்பர், "கவலைப்படாதே,
இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும். எல்லாம் அவன் பார்த்துக்குவான்..." என்று
சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர் சொன்ன அந்த வாசகம் அவருக்கு நம்பிக்கையைத் தந்திருக்க
வேண்டும். இதே வாசகம்
வலிமையானவர்களிடம் தன்னுடைய சொல்லோ, செயலோ தாழ்ந்து விடும் நிலையில் "எல்லாம்
அவன் பார்த்துக்குவான்..." என்று தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தி ஒதுங்கி
விடும் நிலைக்கு அவர்களைக் கொண்டு போய் விட்டு விடுகிறது. ஒவ்வொருவருக்கும ்
இந்த வாசகத்தைப் பயன்படுத்தி பல வழிகளைச் சொன்னாலும், இந்த வழிகாட்டுதல்கள்
எல்லாம் உண்மையில் நடைமுறைக்குச் சாத்தியமானதா? முயற்சியும் பயிற்சியும் சேர்ந்த செயல்பாடுகள் தராத வெற்றிகளா?
"எல்லாம் அவனவன் பார்த்துக் கொள்ள வேண்டும்..." இதுதான்
வாழ்க்கை!!
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.