ஒரு துறவியிடம் வந்து ஒரு பெண், “என் மாமியாரிடம் நான் படும் துன்பம் தாங்க முடியவில்லை. என் வாழ்வை நரகமாக்குகிறாள். அவளைச் சாகடிக்க ஏதாவது மருந்து கொடுக்க முடியுமா?” என்று கேட்டாள்.
துறவி அவளுக்கு ஒரு மருந்தை எடுத்துக் கொடுத்து, “இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமானால், ஒரு நிபந்தனை இருக்கிறது. இந்த மருந்தை அன்புடனும் கருணையுடனும் கொடுத்தால்தான் அது வேலை செய்யும். மேலும் அப்படிச் செய்யும்போது, உன் மீதும் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். இரண்டு மாதத்தில் உன் மாமியார் இறந்து விடுவார்” என்றார்.
ஒரு மாதத்திற்குப் பின்பு அந்தப் பெண் துறவியிடம் மீண்டும் வந்தாள்.
அவள், “சுவாமி, இப்போது என் மாமியார் என்னிடம் மிக அன்பாக இருக்கிறார். அவர் சாகக்கூடாது.வேறு எதேனும் மருந்து கொடுங்கள்'' என்றாள்.
துறவி சொன்னார், “வேறு மருந்து தேவையில்லை. உன் அன்பும் கருணையுமே சிறந்த மருந்து”