ஒரு நதிக்கரை ஓரத்தில் ஒரு கொக்கும் அதோட மனைவியும் வாழ்ந்து கொண்டிருந்தன.
அவங்க ஒவ்வொரு முறையும் முட்டை போட்டுக் கொக்குக் குஞ்சு வரும் என்று காத்துக் கொண்டிருந்த போதெல்லாம் ஒரு பாம்பு அந்த முட்டையைத் தின்றுவிடும்.
அதைப்பார்த்த அந்தக் கொக்குகளுக்கு வருத்தமாக இருந்தது.
நாம் எப்போது முட்டை போட்டாலும் இந்தப் பாம்பு வந்து அதைத் திண்ணுடுதே என்று மிகவும் கவலைப்பட்டன.
அப்போது ஒரு நண்டு, நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று சொன்னது.
நண்டு, அந்தக் கொக்குங்க கிட்ட ஒரு யோசனை சொன்னது.
அந்த யோசனைப்படி சின்ன சின்ன மீன்களைப் பிடித்துப் பக்கத்திலே வாழுகிற கீரிப்பிள்ளை வலைவாசலில் கொண்டு போட்டன.
காலையில் எழுந்த அந்தக் கீரிப்பிள்ளை, அடடா இந்த மீன்கள் எப்படி இங்கே வந்தது என்று யோசித்துக் கொண்டே அந்த மீன்களைச் சாப்பிட்டது.
அதைப்பார்த்த அந்த கொக்கு மறுநாள் நிறைய மீன்களைக் கொண்டுவந்து கீரிப்பிள்ளையோட வலையிலேயிருந்து அந்த பாம்பு வசிக்கிற புற்று வரைக்கும் போட்டது.
அதைப் பார்த்த கீரிப்பிள்ளை அந்த மீன்களைச் சாப்பிட்டுக் கொண்டே மெல்ல அந்த பாம்பு இருக்கும் புற்றுக்கு வந்தது.
இந்தப் புற்றிலே இருந்துதான் மீன் வருகிறதா? என்று பார்த்தது அந்தக் கீரிப்பிள்ளை.
அப்போதுதான் தூக்கத்திலே இருந்து எழுந்த பாம்பு வெளியே வந்தது.
கீரிக்கும் பாம்புக்கும் கடுமையான சண்டை நடந்தது.
அந்தச் சண்டையை அந்தக் கொக்குகளும் நண்டும் பாத்துக் கொண்டே இருந்தன.
அந்தக் கீரி அந்த பாம்பைக் கொன்று போட்டது.
அதனைக் கண்ட கொக்குகள், இனி நம் முட்டைகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மகிழ்ந்தன.
ஆனால் மறுநாள், அந்தக் கீரி மரத்திலே ஏறிக் கொக்கின் முட்டைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
நமக்கு ஆபத்து வந்தால் எதிரிகளை நாம்தான் சமாளிக்க வேண்டும், அதை விடுத்து மற்றவரைச் சார்ந்திருந்தால், அதுவும் நமக்கு ஆபத்துதான்.