ஒரு படகின் சொந்தக்காரர், தன்னுடைய படகைப் புதுப்பிக்க எண்ணினார்.
அதற்கு ஒரு பெயிண்டரை வரச்சொல்லி இருந்தார்.
அவரும் அந்த படகுகிற்கு பெயிண்ட் அடிக்கத் தொடங்கினார். அப்போது, அந்தப் படகில் ஒரு பெரிய ஓட்டை இருப்பதைப் பார்த்தார். அதைத் தனக்குத் தெரிந்த முறையில் அடைத்துவிட்டுப் பெயிண்டும் அடித்து முடித்து வீட்டுக்கு சென்றார்.
பின், அந்தப் படகுகாரரின் மகன்கள் இரண்டு பேரும் படகை எடுத்துக் கொண்டு கடலுக்குப் போய்விட்டார்கள்.
“ஐயோ, மகன்களிடம் படகில் ஓட்டை இருப்பதைச் சொல்ல மறந்துவிட்டேனே, அந்த ஓட்டை வழியாகத் தண்ணீர் உள்ளேப் புகுந்து படகு மூழ்கிவிடுமே... மகன்களும் இறந்து போய்விடுவார்களே” என நினைத்து வருத்தப்பட்டார்.
அந்நிலையில், அந்தப்படகுடன் அவருடைய மகன்கள் இருவரும் நல்லபடியாகக் கரைக்குத் திரும்பினர்.
அதன் பிறகு, அவர் படகிற்கு சென்று பார்த்தார். படகிலிருந்த ஓட்டை அடைக்கப்பட்டு இருந்ததைக் கவனித்தார்.
உடனே அவர், அந்தப் பெயிண்டரைத் தேடிச் சென்று நடந்ததைச் சொல்லி நல்ல வெகுமதியும் தந்தார்.
பெயிண்டர், “நான் என்னோட கடமையைத்தான் செய்தேன். அதற்கு வெகுமதி எல்லாம் வேண்டாம்” என்று கூறினார்.
“நீங்க உங்கள் கடமையைச் செய்து இருக்கலாம். ஆனால், அதனால் காப்பாற்றப்பட்டது என்னுடைய படகு மட்டுமல்ல, என்னுடைய இரு மகன்களும்தான்” என்று கூறி அந்த வெகுமதியை தந்துவிட்டுச் சென்றார்.