இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

குரு தட்சணை


சாது மகாநாமர் என்பவர் கபிலவஸ்து என்ற ஊரில் பிறந்தவர். பகவான் மகாவீரரைக் குருவாகக் கொண்டவர். தூய உள்ளமும் நல்லொழுக்கமும் பிறவியிலேயே அவருக்கு இயல்பாக அமைந்து இருந்தன.

பகவான் மகாவீரரின் சீடராகப் பணிபுரிந்த போது அவர் உபதேசித்த ஒரு வாக்கியம், “நாஸ்தி தியாக சமண் சுகம்” என்பது. அதன் பொருள் தியாகத்தை மிஞ்சிய சுகம் இல்லை என்பது தான். அவ்வாக்கியம் அவரின் உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது.

ஒரு காலத்தில் அவரிடம் கல்வி கற்ற மாணவனான விடூபன் என்பவன், சீராவஸ்தி என்ற நகருக்கு அரசனானான். பிறகு, அவன் பெரும் படையோடு கபிலவஸ்துவை முற்றுகையிட்டுப் புரிந்த போரில் வெற்றியும் பெற்றான்.

இரக்கம் என்பதே அறியாத அவன் அப்பாவி மக்களையெல்லாம் கொன்று குவிக்கத் தொடங்கினான்.

அப்போது அங்கு வருகை தந்த மகாநாமர் இதைக் கேள்விப்பட்டுத் தன்னிடம் கல்வி கற்ற ஒரு மாணவன் இத்தகையk கொடூர குணமுடையவனாக இருக்கிறானே என்று எண்ணிக் கலங்கினார்.

இச்செயலைத் தடுத்தே ஆக வேண்டும் என்ற உறுதியோடு அவனைக் காணச் சென்றார். தான் ஓர் அரசன் என்ற கர்வம் விடூபனுக்கு இருந்த போதிலும், தனக்குக் குருவாக இருந்ததால் அவரை வரவேற்க வேண்டியதாயிற்று.

அவனுக்கு வணக்கம் கூறிய மகாநாமர் “அரசே நீ என்னிடம் கல்வி கற்ற போது குருதட்சணை கொடுக்க முன் வந்தாய். ஆனால், நான் அதை வேண்டும் போது பெற்றுக் கொள்வதாகக் கூறியிருந்தேன். இன்று அதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளவே வந்திருக்கிறேன்” என்றார்.


சற்றுத் தயங்கிய விடூபன் “சரி கேளுங்கள்" எனத் தலையசைத்தான்.

“இங்கு அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும் என்பதே நான் உன்னிடம் கேட்கும் குருதட்சணை" என்றார் மகாநாமர்.

குள்ளநரியைப் போல் சில கணங்கள் யோசித்த விடூபன் “குருதேவா, இந்த தட்சணையை ஒரு நிபந்தனையோடு தங்களுக்குத் தர விரும்புகிறேன். அரசன் என்ற முறையில் என் நாட்டையும் மக்களையும் நான் காப்பாற்றியாக வேண்டும். தோல்வியுற்ற இந்நாட்டு மக்கள் நாளை படை வீரர்களாய் உருவாகலாம். என் நாட்டின் மீது போரும் தொடுக்கலாம் அல்லவா? ஆனால் என் குரு என்பதால் தங்களின் தட்சணையையும் நான் மறுக்க விரும்பவில்லை. ஆகவே நீங்கள் ஒரு நீர் நிறைந்த குளத்தில் மூழ்கி மேலே வரும் கால அளவு வரை நான் அவர்களைக் கொல்லும் செயலை நிறுத்தி வைக்கிறேன் இதற்குச் சம்மதமா?” என்று கேட்டான்.

கொடூரமான இந்த நிபந்தனைக்குச் சற்றும் தயங்காமல் சரி என்று தலையசைத்த மகாநாமர் “அப்படியே ஆகட்டும்” என்றார். கொலைத் தொழில் நிறுத்தப்பட்டது.

மகாநாமர் நகர்ப்புறத்திலுள்ள ஓர் ஆழமான குளத்தில் அரசன் கண் முன்பே குதித்து அமிழ்ந்து போனார்.

இதையறிந்த மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதையும் மறந்து பதைபதைத்து நீரில் மூழ்கிய அந்த ஞானியைக் காணக் கூடினர். அரசனும், ஏனையோரும் அவர் மேலே வருவதை எதிர்பார்த்துக் காத்து இருந்தனர். ஆனால் நேரம் சென்று கொண்டு இருந்ததே தவிர மகாநாமர் மேலே வரக் காணோம்.

நீண்ட நேரம் காத்திருந்த அரசன் சலிப்பும் சினமும் அடைந்து, தன் படைவீரர்களைக் குளத்தில் இறங்கித் தேடக் கட்டளையிட்டான். தன் இடுப்பில் கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் மூழ்கி இறந்து விட்ட மகாநாமரின் உடலை வீரர்கள் மேலே கொண்டு வந்தனர்.

அதைக் கண்ட அரசன் திடுக்கிட்டான். மக்களைக் காக்கும் பொருட்டுத் தன் இன்னுயிரைத் துச்சமென ஈந்த அந்த குருநாதரின் புன்னகை புரியும் ஒளி நிறைந்த முகத்தை உற்று நோக்கினான்.

மக்கள் கூக்குரலிட்டனர்; கதறித் துடித்தனர்.

“குருவையேக் கொன்று விட்ட மகாபாவி” எனச் சாடினர்.

விடூபன் தலை குனிந்தவாறு தன் கொடிய செயலுக்கு வருந்தி அவ்விடம்விட்டு அகன்றான்.

தியாகத்தை மிஞ்சிய சுகம் எது? எனச் செயலில் செய்து காட்டிய மகாநாமரை நாம் நினைவில் கொண்டு அவ்வழி நடப்போம்.

நன்றி:கவிஞர் வெள்ளியங்காட்டான் எழுதிய “நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/parable/p1550.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License