தான் வெளியூர் சென்று திரும்பும் முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்து விடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்தக் குருநாதர்.
எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள்.
ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமேப் படித்ததாகச் சொன்னார்.
மிகக் கடுமையாகத் திட்டினார் குரு.
சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு.
அந்த இளைஞர் வருந்தவில்லை.
சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, அந்தச் சீடரை அழைத்து, “நீ படித்த வரி என்ன?” என்று கேட்டார்.
“உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. எப்போதும் நிதானமாக இரு” என்பதே அந்த வாசகம் என்றார் அந்தச் சீடர்.
வெட்கித் தலை கவிழ்ந்தார் அந்தக் குரு.
அந்தக் குரு, துரோணர், அந்தச் சீடர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமர்.