மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஒரு தம்பதியரில் மனைவிக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு நாள் வாழ்ந்த பிறகு தன்னுடைய கணவனுக்கு, தன்னுடனான வாழ்க்கை அலுப்பு தட்டி விட்டிருக்குமோ என! ஒருவேளை, தான் விலகிப்போய் விட்டால், கணவன் எப்படி நடந்து கொள்வான் என்பதை பார்க்க ஆர்வம் கொண்டாள்.
அன்று, தன் கணவன் வீடு திரும்பும் முன்னர், ஒரு சின்ன காகிதத்தில் ஒரு குறிப்பை எழுதி, அவன் பார்வையில் படும் இடத்தில் வைத்து விட்டு கட்டிலுக்கடியில் ஒளிந்து கொண்டாள்.
கணவன் வீடு திரும்பினான்.
மேசையின் மீது இருந்த குறிப்பைப் பார்த்தான்.
அந்தக் குறிப்பில், “உன்னுடனான எனது வாழ்க்கை சலித்து விட்டது. நான் உன்னை விட்டு செல்கிறேன். என்னைத்தேட வேண்டாம்” என்றிருந்தது.
குறிப்பை படித்தவன், குறிப்பின் பின்புறத்தில் ஏதோ கிறுக்கி விட்டு, தன் திறன்பேசியை எடுத்து யாருடனோ பேசினான்.
கடைசியாக அவள் போய் விட்டாள். நமக்கு இருந்த ஒரு தடையும் நீங்கி விட்டது. நான் உன்னை சந்திக்க வருகிறேன். தயாராய் இரு.
போய்க்கொண்டே, கதவை சாத்தி விட்டு வெளியேறினான்.
அழுது கொண்டே , கட்டிலுக்கு அடியிலிருந்து வெளியே வந்தவள், குறிப்பின் பின்னால், அவன் என்ன எழுதினான் என்று பார்க்க, குறிப்பை எடுத்தாள். படித்தாள்.
“ஏ! பைத்தியம், நீ கட்டிலுக்கு அடியில் ஒளிஞ்சிருக்கிறத பார்த்து விட்டேன். எனக்குப் பசிக்கிறது. கடைக்குப் போய் ரொட்டி வாங்கி வருகிறேன். ரொட்டி ஆம்லெட் போட்டு சாப்பிடப் போகிறேன். உனக்கு ஏதாவது வேணும் எனில், என்னை அழைபேசியில் அழைக்கவும். இந்த உலகத்திலே எதையும் விட அதிகமா நான் உன்னை நேசிக்கிறேன். அன்பு முத்தங்கள்!”
இப்போது அவள், அவனை அலைபேசியில் அழைத்தாள்.
அவன் அலைபேசியில் என்ன வேண்டும்? என்று கேட்டான்.
அவள், நீங்கள்தான் வேண்டும், விரைவில் வீட்டிற்கு வாருங்கள் என்றாள்.