பெருந்துறவியாக விளங்கியவர் அரசாச்சாரிய சுவாமிகள். அவர் நாள்தோறும் சிவபெருமானை உள்ளன்போடு வழிபட்டு வந்தார். எதையும் செய்யும் ஆற்றல் வாய்ந்தவராகவும் அவர் விளங்கினார்.
இதை அறிந்த சோழ அரசன் அவருடைய திருவடிகளை வணங்கி, "துறவியாரே! நான் வீடுபேறு அடைய வழி சொல்லுங்கள்" என்று கேட்டான்.
"அரை யாம நேரத்தில் நீ அக்கினிச்சுரத்திற்கு அருகில் உள்ள ஏழு சிவாலயங்களையும் வழிபட்டு வருவாயானால் உனக்கு வீடுபேறு கிடைக்கும்” என்றார் அவர்.
உடனே அவன் குதிரையில் அமர்ந்தான். ஏழு சிவாலயங்களையும் விரைவில் சுற்றி வந்தான்.
அவன் ஏறி வந்த குதிரை திடீரென்று மறைந்தது. தரையில் நின்று கொண்டிருந்தான் அவன். மீண்டும் துறவியிடம் வந்த சோழ அரசன் நடந்ததை எல்லாம் சொன்னான்.
அதற்கு அவர், "சிவாலயங்களைச் சுற்றிய புண்ணியத்தால் உன் குதிரை வீடுபேறு அடைந்தது. நீயும் காலால் நடந்து ஏழு சிவாலயங்களைச் சுற்றி வா. உனக்கும் வீடுபேறு கிடைக்கும்” என்றார்.
அவனும் அப்படியே செய்து வீடுபேறு அடைந்தான்.