அரசர் சீசருடைய எதிரிகள் அவரைக் குற்றம் சாட்டி எழுதிய கடிதங்கள் தற்செயலாக சீசரிடம் கிடைத்தன.
உடனே அவர் எந்தக் கடிதத்தையும் படித்துப் பார்க்காமல் எல்லாவற்றையும் எரித்து விட்டார்.
அருகில் இருந்த நண்பர், "என்ன இப்படிச் செய்து விட்டீர்கள்? நீங்கள் எரிக்காமல் இருந்திருந்தால் இந்தக் கடிதங்களே எதிரிகளை அடையாளம் காணும் சான்றுகள் ஆகாதா?" என்று கேட்டார்.
"நண்பா! நான் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் கோபம் அடையக் கூடாது என்று நினைக்கிறேன். கோபத்தை உண்டாக்கும் எதையும் உடனே அழித்து விடுவதுதான் அதற்கு நல்ல வழி. அதனால்தான் கடிதங்களை எரித்தேன்" என்று விளக்கினார் சீசர்.