கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களிடம் பேராசிரியர் ஒருவர், மாணவர்களே இன்ப சுற்றுலா செல்லலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எங்கே செல்லலாம் என்று நீங்களே கூறுங்கள் என்று கேட்டார்.
உடனே மாணவன் ஒருவன் எழுந்து, “குற்றாலம்” என்றான்.
அதற்குப் பல மாணவர்கள் பல முறை பார்த்தாகக் கூறி மறுத்தனர்.
இன்னொரு மாணவன், கொடைக்கானல், மற்றொரு மாணவன் ஊட்டி, ஒகேனக்கல் என்று பல சுற்றூலா இடங்களைக் கூற அதற்கும் பார்த்தாச்சு என்றே பதில் வந்தது.
உடனே ஒரு மாணவன் எழுந்து, “நம் கல்லூரியின் நூலகம் செல்லலாம், அங்குதான் ஒருவரும் சென்றதில்லை” என்று கூறினார்.
உடனே வகுப்பறை முழுவதும் ஒரே சிரிப்பலை எழுந்தது.
இது சிரிப்பதற்கு மட்டும் அல்ல, சிந்திக்கவும் வேண்டிய விஷயம். இது மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்து கொண்டே செல்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது. பல சாதனையாளர்களை உருவாக்கியது புத்தகங்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. சில சாமானியன்களைச் சரித்திர சாதனையாளர்களாக மாற்றியது புத்தகம்தான்.
உண்மைதானே...?