ஒரு வேதியியல் விஞ்ஞானி, ஒரு உயிரியல் நிபுணர், ஒரு மின்சாரப் பொறியாளர் என்று மூவருக்கும் மின்சார இருக்கையில் அமர வைத்துக் கொல்வதற்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பை நிறைவேற்றுபவன் வேதியியல் விஞ்ஞானியிடம் வந்து, "உங்களுக்கு ஏதேனும் கூற விருப்பமா...?" என்று கேட்டான்.
அவர், "இல்லை" என்றார்.
இருக்கையில் அமர்த்தி சுவிச்சை அழுத்தினான். மின்சார நாற்காலி வேலை செய்யவில்லை.
தண்டனையை ஒரு தடவை நிறைவேற்ற முடியாவிட்டால் விடுதலை செய்ய வேண்டுமென்று அந்த நாட்டில் சட்டம். அதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.
அடுத்து உயிரியல் நிபுணர் அமர்த்தப் பட்டார். அப்போதும் நாற்காலி வேலை செய்யவில்லை. அவரும் விடுவிக்கப்பட்டார்.
அடுத்து மின்சாரப் பொறியாளர் அமர்த்தப்பட்டார்.
அவரிடம், "உங்களுக்கு ஏதேனும் கூறுவதற்கு உள்ளதா...?" என்று கேட்கப்பட்டது.
"ஆமாம்" என்ற அவர், "அந்த நீல நிற ஒயரையும், சிகப்பு நிற ஒயரையும் இணைக்காமல் மின்சார நாற்காலி எப்படி வேலை செய்யும்?" என்று சொன்னார்.
அவர் சொன்னதைக் கேட்டவன், அவர் சொன்னபடி செய்தார். மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
உண்மையைக் கூறக் கூடாத இடத்தில் கூறியதால் அவர் உயிரிழந்தார்.
சில நேரங்களில் நமக்கு அனைத்தும் தெரிந்திருந்தாலும் மௌனமாயிருப்பதே சிறந்தது.