இதுதான் உலகம்
காணப்படும் உலகம் வேறு; அறியப்படும் உலகம் வேறு.
- பிளாட்டோ.
உலகம் தனது இளமையை இழந்து விட்டது. முதுமை அடைய ஆரம்பித்து விட்டது.
- பைபிள்.
உலகமே நாடக மேடை. அனைத்து ஆண்களும், பெண்களும் அதில் நடிகர்களே.
- சாக்ரடீஸ்.
உலகமே ஒரு பெரிய சிறைச்சாலை. அதிலிருந்து சிலர் தினமும் தூக்குத் தண்டனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
- வால்ட்டர் ராலே.
உலகம் ஒரு சமுத்திரமல்ல, மருத்துவமனை; வாழத் தகுந்த இடமல்ல. மரணக் குழி.
- தாமஸ் பிரௌன்.
உலகமே அழிந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
- முதலாம் பெர்னாண்ட்.
இந்த உலகம் பைத்தியக்காரர்களால் நடத்தப்படும் பைத்தியக்கார விடுதி போல் ஆகிக் கொண்டிருக்கிறது.
- டேவிட் லாயிட் ஜார்ஜ்.
இரண்டு மனிதர்கள் ஒரே மாதிரியாக இருந்தால் அவர்களை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு உலகம் பெரியதாக இல்லை.
- கலீல் கிப்ரான்.
உலகத்திற்குத் தொலைநோக்குப் பார்வையும் குறுகிய காலத் தீர்வுமே தேவை.
- யாரோ.
இந்த உலகத்தை வாழ்வதற்கேற்ற நல்ல இடமாக்க ஏசுவைப் போல், புத்தரைப் போல் அன்பு செலுத்து.
- இசதோரோ டங்கன்.
இந்த உலகை குருட்டு அதிர்ஷ்டத்தால் சில காலம் ஆளலாம். ஆனால், அன்பொழுக்கத்தினால் உலகை நிரந்தரமாக ஆளலாம்.
- லாவோட்சே.
தொகுப்பு:- தேனி.பொன். கணேஷ்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.