வானியல் பழமொழிகள்
இங்கு பயிர் - உழவு, மின்னல், இடி, துாற்றல், காற்று, திசைகள், வானம், செவ்வானம், வானவில், அடைமழை, மழை, அந்தி மழை, வசந்த காலம் - மழை, நிலையற்ற - மழை, விவசாயம் - பனி - மழை ஆகியவை குறித்த பழமொழிகளைக் காண்போம்.
பயிர் - உழவு
* முக்கூட்டுப் பயிர் வாழ்.
* அகல உழுவதை விட ஆழ உழு.
* அதிர அடித்தால் உதிர விளையும்.
* சனிப்பயிர் சாத்திரத்திற்கு உதவும்.
* நட்டன்று மழையும் கெட்டன்று விருந்தும்.
* மாதம் மும்மாரி பெய்தால் முப்போகம் விளையும்; மாதம் ஒரு மாரி பெய்தால் இரு போகம் விளையும். மூன்று மாதத்திற்கு ஒரு மாரி பெய்தால் ஒரு போகம் விளையும்.
* மழை காணாத பயிர் தாய் முகங்காணச்சேய் போல் வாடும்.
* மழை காணாத பயிர் தாய்முகங் காணாச் சேய் போல.
* அடை மழையில் நாற்று நட்டால் அவையெல்லாம் படுநாசம்.
* கார் அறுக்கட்டும்; கத்திரி பூக்கட்டும்.
* காலத்திற் பெய்த மழையைப் போல.
* உறவினர்க்கு உதவி செய்! - பருவ மழை பொய்த்தாலும் பெய்யும்.
* உரிய பருவ காலத்தில் மழை பெய்யாமற் போனாலும், பருவந் தவறியாவது மழை பெய்தே தீரும். அது போல், எப்போதும் எந்த உதவியையும் வேண்டிய காலத்தில் செய்யாதவர் எப்போதாவது உதவி செய்வார். எவரிடமும் எப்போதாவது உதவி பெறும் காலம் வரும் என்பது பாடற் கருத்து.
“ செய்யார் எனினும் தமர் செய்வர் பெய்யுமாம்; பெய்யாது எனினும் மழை .
* பிள்ளை பிறப்பதும், மழை பெய்வதும் மகாதேவரின் சித்தம்.
மின்னல் - இடி
* மின்னாமல் இடி விழுமா?
* மின்னினால் மழை பெய்யுமா?
* மின்னுக்குப் பின் மழை.
* மின்னலுக்குப் பின் மழை.
* ஈசானி மின்னலுக்கு எருதும் நடுங்கும்.
* கோடை இடியும் மாரி மின்னலும் மழை அதிகம்.
* பொழுத்துக்கால் மின்னல் விடியற்காலை மழை.
* ஈழமும் கொங்கும் எதிர்த்து மின்னினால் பள்ளத்திலிருக்கிற குடிலை மேட்டில் போடு.
* மின்னிக் கெட்டது கார் முழங்கிக் கெட்டது பிசானம்.
* மாரி இடியும் கோடை மின்னலும் மழை இல்லை.
* மின்னலால் தாக்குண்டவன் இடியோசையைக் கேட்க மாட்டான். உறங்கோரியன் பழமொழி.
* அருங்கோடை துரும்பு அற்றுப்போகுது ஆகாய வல்லிடி அதிர இடிக்கும்.
* இடியோசை கேட்ட பாம்பு (நாடகம்) போல.
* இடி விழுந்த மரம் போல ஏங்கினான்.
* இடி விழுவானுக்கு வாழ்க்கைப்பட்டு எந்நேரமும் இடி, ஜாமம்.
* இடிக்கிற மானம் பெய்யாது, குறைக்கிற நாய் கடிக்காது.
* கோடை இடியும் மாரி மின்னலும் மழை அதிகம்.
* மாரி மின்னலும் கோடை இடியும் மழை.
* தலையிடியும் சங்கடமும் தனக்கு வந்தால் தெரியும்.
* கோடையிடி குமுறினாற் போல. மின்னலுக்குப் பின் மழை.
* ஆகாய வல்லிடி அதிரடி இடிக்கும்.
துாற்றல்
* அழுகைத் தூத்தல் அவ்வளவும் பூச்சி.
* தரித்திறம் பிடித்தவள் தலை முழுகப் போனாளாம். அப்போதே பிடித்ததாம் மழையும், தூற்றலும்.
* தூற்றல் நின்றாலும் தூவானம் நில்லாது.
* விட்டு விட்டுப் பெய்யும் மழையை விட விடாமற் பெய்யும் தூவானம் நல்லது.
* தும்மலிலே போனாலும் தூற்றலிலே போகக் கூடாது.
* தூற்றல் நின்றாலும் தூவானம் நில்லாது.
* மழை விட்டும் தூவானம் விடவில்லை.
* மழை விழுந்தால் தாங்கலாம். வானம் விழுந்தால் தாங்கலாமா?
* மாரி அடைக்கில் ஏரி உடைக்கும்.
* காலை உப்பலும் கருத்தணி வெயிலும் மாலை மேகமும் மழைதனில் உண்டு
* மாரியல்லது காரியமில்லை.
* மாரி பொய்ப்பின் மண் பொய்க்கும்.
காற்று
* காலை மோடமும் கழுதை வாடையும் மாலைத் தென்றலும் மழையில்லை.
* தென்றலும் வாடையும் சிறக்கும் பயிர்கள்
* வடக்காற்றடித்தால் உடனே வரும் மழை.
* வட காற்றடித்தால் உடனே மழை.
* வடகாற்று அடிக்க வந்தது மழையே.
* வடகாற்று அடித்தால் மழை.
* மாரித் தென்றல் அடித்தால் மாட்டை விற்று ஆட்டை வாங்கு.
* கடுங்காற்று மழை காட்டும். கடுஞ்சினமே பகை காட்டும்.
* வடகாற்றடிக்க வந்தது மழையே.
* குமுறியடித்தால் காற்றுக்கு கை மேல் மழை.
* அந்தி கிழக்கு அதிகாலை மேற்கு.
* மூலக்காற்று புழு விழும்.
* ஓயா மழையும், ஒழியாக் காற்றும்.
* கடுங்காற்று மழை கூட்டும், கடும் சிநேகம் பகை கூட்டும்.
* காற்றுக்கோ மழைக்கோ போர்த்துக் கொள்ளத் துணியிருக்கா?
* காற்றும் மழையும் கலந்து அடித்ததைப் போல
* காற்றைப் பிடித்துக் கரகத்தில் அடைக்கலாமா?
* காற்றோடு வந்து மழையோட போயிற்று.
* தும்மலிலே போனாலும் காற்றிலிலே போகக் கூடாது.
* கடுங்காற்று மழை காட்டும்; கடுநட்புப் பகை காட்டும்.
* தென்றல் தெறிபட்டுப் போகும். தென்றல் காற்று மேகத்தைக் கலைத்து விடும்.
* கச்சானுக்கு மச்சான் மழை. (கச்சான் என்பது மேல் காற்று)
* கொம்பு சுற்றிக் காற்றடித்தால் மழை வரும்.
* அடிக்கிற காற்றுக்கும் பெய்கிற மழைக்கும் பயப்படு.
* வடக்கே கறுத்தால் மழை வரும்.
திசைகள்
* தன் ஊர் கிழக்கு; தங்கின ஊர் மேற்கு. வேட்டகம் தெற்கு. வேண்டாத ஊர் வடக்கு (தலை வைத்துப் படுக்கும் திசை)
* மேற்கே மழை பெய்தால் கிழக்கே வௌ்ளம் வரும்.