சில விலங்கு, பறவை பழமொழிகள்
நாய், மயில், வௌ்ளாடு, ஆமை, ஆந்தை, செம்போத்து, பூனை, பல்லி, கருடன், காடை, காகம், குள்ளநரி, சாரை, நாரை ஆகியவை பற்றிய பழமொழிகளைக் காண்போம்.
நாய்
* நாய் உதறினால் நல்ல சகுனம்
* நாய் ஊளையிட்டால் ஊர் நாசம்.
வௌ்ளாடு
* வௌ்ளாளன் கால் வைத்த இடமும், வௌ்ளாடு கால் வைத்த இடமும் உருப்படாது.
ஆமை
* ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும்.
* ஆமை புகுந்த வீடு உருப்படாது.
ஆந்தை
* ஆந்தை சிறியது கீச்சல் பெரியது.
* ஆந்தை விழிப்பது போல விழிக்கிறான்.
* ஆந்தை பஞ்சையாக இருந்தாலும் சகுனத்திற்குப் பஞ்சையில்லை.
செம்போத்து
* செம்போத்து வலமானால் சம்பத்து உண்டாகும்.
* செம்போத்து வலமானால் சம்பத்து உண்டு.
பூனை
* மடியிலே பூனையைக் கட்டிக் கொண்டு சகுனம் பார்த்தாற் போல.
* சகுனம் பார்க்கையில் மடியில் பூனையைக் கட்டிக் கொண்ட மாதிரி.
பல்லி
* உச்சத்தில் பல்லி சொன்னால் அச்சம் இல்லை.
* கௌளி (பல்லி) ஊருக்கெல்லாம் பலன் சொல்லும். தான் மாத்திரம் தவறி கழுநீர்ப் பானையில் விழும்.
* கழுநீர்ப் பானையில் விழுந்த பல்லியைப் போல.
கருடன்
* கருடன் இடமானால் கையில் பொருள் சேரும். கருடன் இடமானால் எவர் கைப்பொருளும் தன் வசமாகும்.
* கருடன் இடமானால் எவன் கைப்பொருளும் தன் கையில் சேரும்.
* வெண்டலைக் கருடன் வந்திடுமானால் எவர் கைப்பொருளும் தன் பொருளாகும்.
காடை
* காடை இடமானால் நாட்டை ஆளலாம்.
* காட்டுக் காடை இடமானால் குட்டிச் சுவரும் பொன்னாகும்.
* காடை கத்தினால் பாடை கட்ட வரும்.
காகம்
* காகம் இடமானால் ஆயுள் விருத்தியாகும்.
* காகம் வலமானால் ஆயுசு விருத்தியாகும்.
குள்ளநரி
* ஒரு ஆட்டுக்குட்டியை நக்குவதைப் பார்ப்பது ஒரு தீங்கின் அடையாளம் - ஆங்கிலப் பழமொழி.
* நரி வலம் வந்தால் என்ன, இடம் வந்தால் என்ன, நம் மீது விழுந்து பிடுங்காது இருந்தால் போதும்.
* நரி இடமானால் என்ன, வலம் போனால் என்ன் மேலே விழுந்து கடிக்காமல் போனால் சரி.
* நரிமுகத்தில் விழித்தால் நன்மைகள் நடக்கும்.
* நரியின் கலியாணத்தில் எவன் கைப்பொருளும் தன் கையிற் சேரும்.
சாரை
* சாரையைத் தின்னும் ஊருக்குப் போனால் நடுக்கண்டம்.
நாரை
* விளைவது கட்டைக்காரனுக்கு நாரை வலமானால் ஒரு பணம், விற்கிறது ஒன்றே கால் பணம் விற்கும்.
* விறகு வெட்டியும், நாரையும் வலமானால் நல்ல இலாபம்.
இவ்விதம் பழமொழிகள் குறிப்பிடப்பெற்றுள்ளன.
தொகுப்பு:- முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.