* பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
* ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
* ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
* ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
* மற்றவர்களிடம் பழகும் விதத்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.
* வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
* நான் சாதாரணமானவன். என் மனதில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி, இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்றுகூறவில்லை. ஏற்கக்கூடிய கருத்தை உங்கள் அறிவைக் கொண்டுஆய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
* ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தையும், மற்றவர்களுக்கும் உண்டாகச் செய்வதுதான் நாகரிகம்.
* இனி வரும் காலங்களில் உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் மலிந்து ஆளுக்கு ஆள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க வசதிகள் ஏற்படும்.
* உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதனுக்குத் தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்.
* கட்சி மாறுகிறவன் அயோக்கியன், அயோக்கியன், மகா அயோக்கியன்.
* ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான் என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப் போய்விடுவதில்லை.
* மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
* பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி.
* மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்.
* விதியை நம்பி மதியை இழக்காதே.
* மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
* மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
* பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
* பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
* பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
* தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்.
* கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
* பொதுவுடைமை என்பதன் தத்துவமே, மனிதன் கவலையற்று வாழ்வதுதான். சொந்த உடைமை என்பது கவலை சூழ்ந்த வாழ்வேயாகும்.
* ஆழ்ந்து யோசித்தால், காதலின் சத்தற்ற தன்மை, பொருளற்ற தன்மை, உண்மையற்ற தன்மை, நித்யமற்ற தன்மை அதைப் பிரமாதப்படுத்தும் அசட்டுத் தன்மை ஆகியவை எளிதில் விளங்கிவிடும்.
* பொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாராவது தன் கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்தக் கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுத்திக் கொள்பவரே ஆவார்.
* பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை. இவை தமிழ்ச் சொற்களும் அல்ல.