
கெட்டவனுடைய மனோதைரியம் அவனையே அழித்துவிடும்.
- கோல்ரிட்ஜ்

முட்டாள்களின் நாட்டில் கயவர்கள்தான் செல்வந்தர்கள்.
- வின்ஸ்டன் சர்ச்சில்

மனிதன் தனக்கு அநியாயம் இழைக்கும் முழு உலகத்தையும் எதிர்த்து நிற்க முடியும். ஆனால், தான் அநியாயமாக நடத்தும் ஒருவனின் எதிரில் நிமிர்ந்து நிற்கவே முடியாது.
- வ.ஸ. காண்டேகர்

மனிதன் வெறுமனே மகிழ்ச்சியாக வாழ்வதற்காக மட்டும் படைக்கப்படவில்லை. மனிதகுல நன்மைக்கான மிக உயர்ந்த உணர்வெழுச்சிகளை அடைந்து, அதன் மூலம் சாதனைகள் நிகழ்த்தவே படைக்கப்பட்டு உள்ளான்.
– ரெனான்

இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே.
– ஆபிரகாம் லிங்கன்

கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது.
- லியனார்டோ டாவின்சி

பிறந்த குழந்தை கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது.
– நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

அழுக்கும் அவலமும் மண்டிக்கிடக்கும் அரசியல் வானில் உன் உதயத்தைக் கண்டேன். இன்று நீ நடுப்பகலில் பிரகாசிக்கும் சுத்த சூரியன் என்பதை நிரூபித்துவிட்டாய்.
– ரவீந்தரநாத் தாகூர்

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
– அம்பேத்கர்

மனதைப் பண்படுத்தவும், மானிட இன்பங்களின் பேரின்பமான உன்னதத்தை அடையவும், ஒருவர் தம் வாழ்வை அர்ப்பணித்து பிறர்வாழ முயல வேண்டும்.
– புத்தர்

அறிவற்றவர்களை அதிகாரத்துக்குள்ளாக்குவது உண்மையான அறிவின் செயல்பாடல்ல. மாறாக, மற்றவர்களையும் அறிவாளியாக மாற்றுவதுதான்.
- கார்ல் மார்க்ஸ்

சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல, சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது!
-ஏங்கல்ஸ்

கல்வியின்மையால் அறிவை இழந்தோம்; அறிவின்மையால் வளர்ச்சியை இழந்தோம்; வளர்ச்சியின்மையால் சொத்தை இழந்தோம்; சொத்து இல்லாததால் சூத்திரர்களாக ஆனோம்.
- ஜோதிராவ் புலே

சோம்பலைத் தடுக்க வேண்டுமா? அதிகமாக உண்பதைத் தவிர்த்திடு.
- டால்ஸ்டாய்

உயர்ந்த பண்பாடு என்னும் சிறைக்குள் அடைப்பட்டு, அதைப் பயில நேர்மை எனும் சட்ட திட்டங்களை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இருக்க முடியும்.
- கவிஞர் தாகூர்

நாம் மேலே போகும் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் கிழே வரும்போது அது முடியாது.
- நெப்போலியன்

செய்யும் காரியங்களை மிகைப்படுத்துகிறோம். தகாத வெற்றிகளை அடைகிறோம். தோல்வியடையும் போதோ இவையெல்லாவற்றையும் விட அதிக கசப்படைகிறோம்.
- சிரில்

தண்ணீரில் ஏற்படும் வட்ட அலைகள் பெரிதாகிக்கொண்டே போய்க் கடைசியில் மறைந்துவிடும்; அது போல் புகழும் பெருகிக் கொண்டே போய்க் கடைசியில் ஒன்றுமில்லாமல் மறைந்துவிடும்.
- ஷேக்ஸ்பியர்
தொகுப்பு:- மு.சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.