அம்மாவைப் பற்றி...

நான் பார்த்ததிலேயே மிகுந்த அழகான பெண் என் அம்மா. நான் என் வாழ்க்கையில் பெற்ற அனைத்து வெற்றிகளுக்கும் அவரிடமிருந்து நான் பெற்ற தார்மீக, அறிவார்ந்த மற்றும் உடற்கல்வியே காரணமென்று கூறுவேன்.
- ஜார்ஜ் வாஷிங்டன்

நான் எனது தாயின் பிரார்த்தனைகளை நினைவு கூருகின்றேன் அவை எப்பொழுதும் என்னைப் பின்தொடர்கின்றன. அவை வாழ்நாள் முழுவதும் என்னை பாதுகாப்பு அரணாக பற்றிக்கொண்டுள்ளன.
- ஆப்ரஹாம் லிங்கன்

உங்களிடம் சொல்ல முடியாத அளவுக்கு உறுதியான செல்வம், தங்க நகைப் பெட்டகங்கள் மற்றும் தங்க கருவூலங்கள் என எல்லாம் இருக்கலாம், ஆனால் ஒரு போதும் நீங்கள் என்னை விடப் பணக்காரனாக முடியாது. அனைத்து செல்வங்களையும் விட உயர்ந்த, என்னைப் படிக்க வைத்த ஒரு தாய் என்னிடம் இருந்தாள்.
- ஸ்டிரிக்லேண்ட் கில்லன்

எனது அம்மா ஒரு கடின உழைப்பாளி. அவர் தலைகீழாக நின்றேனும் ஒரு காரியத்தை செய்து முடிப்பார். மேலும் அவர் மகிழ்ச்சியாக இருக்க ஒரு வழியைக் கண்டறிந்துள்ளார். ‘மகிழ்ச்சி என்பது உங்கள் சொந்த பொறுப்பு' என்று அவர் எப்பொழுதும் சொல்வார்.
- கார்னர் ஜெனிஃபர்

நான் கீழே விழும் போது எனக்கு உதவ ஓடி வருவார், ஒரு அழகான கதையைச் சொல்லி என் வலியை மறக்கச் செய்வார், காயங்களைக் குணமாக்க அவ்விடத்தில் முத்தங்களைப் பொழிவார், அவர் யார்? அவர் தான் என் அம்மா.
- ஆன் டெய்லர்

தாய்மார்கள் மட்டுமே வருங்காலத்தைச் சிந்திக்க முடியும், ஏனென்றால், அவர்கள் தான் குழந்தைகளின் வடிவில் வருங்காலத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.
- மேக்ஸிம் கோர்கி

கெட்ட மகன்கள் இருக்கலாம், கெட்ட தாயார் கிடையவே கிடையாது.
- அபராதக்ஷமாஸ்தோத்ரம்

அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது.
- ஜெர்மன் பழமொழி

ஒரு தாய் பத்து குழந்தைகளைப் பேணி வளர்க்கலாம் பத்து குழந்தைகள் ஒரு தாயைப் பேணுவது அரிது.
- சீனப் பழமொழி

ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரை தாய்மார்களுக்குத்தான் பயன்படுத்தலாம்.
- தந்தை பெரியார்

பெண்ணாக ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்.
- ஆஸ்கார் ஒயில்ட்

இறைவனால் எல்லா இடத்திலும் இருக்க முடியாததால்தான் தாயைப் படைத்தான்!
- யூதப் பழமொழி

அன்னையின் ஆழ்மனதில் உனக்கு எப்போதும் மன்னிப்பு உண்டு.
- பல்சாக்

அன்னையின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம்!
- ஹென்றி வார்ட்

தொட்டில் ஆட்டப்படும்போது மிகுந்த மகிழ்ச்சி கொள்பவர் குழந்தையா? அன்னையா?
- நான்ஸி

சிறந்த பல்கலைக்கழகம் அன்னையின் மடிதான்.
- ஜேம்ஸ் ரஸ்ஸல்

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் உதவ மாட்டான்!
- தமிழ் பழமொழி
தொகுப்பு:- மு.சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.