கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள்

மரத்தில் ஏற முடியாத மனிதன்தான் ஒருபோதும் மரத்திலிருந்து விழுந்ததில்லை என்று பெருமை பேசிக் கொண்டிருப்பான்.
- லுட்விக் கிளாஜஸ்

கும்பல்களுக்கு இருக்கும் அளவுக்கு ஒரு தனி நபர்க்கு முட்டாள்தனம் இருக்க முடியாது. அதனால்தான் வன்முறையின்போது கும்பல் கொலைகள் இருக்கின்றதே தவிர தனிநபர் கொலைகள் இருப்பதில்லை.
- பென் ஹோரோவிட்

விடுதலை உணர்வின் மிகவும் திருப்திகரமான வடிவம் பொறுப்புகளே இல்லாத வாழ்க்கை அல்ல, மாறாக உங்கள் பொறுப்புகளை நீங்களே தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பிருக்கும் வாழ்க்கையே ஆகும்.
- ஜேம்ஸ் க்ளியர்

வெகுமக்களின் சிந்தனையற்ற ஒப்புதலை விட, ஒற்றை அறிவார்ந்த மனிதரின் கடுமையான விமர்சனத்தை நான் மிகவும் விரும்புகிறேன்.
- ஜோகன்னஸ் கெப்லர்

வாயில் காப்பாளரையும் தலைமை செயலதிகாரியையும் ஒரே கண்ணியத்துடன் நடத்தும் முறையில் நான் வளர்க்கப்பட்டேன்.
- டாம் ஹார்டி

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உழைப்பு பிரிவினைதான் முதல் உழைப்புப் பிரிவினையாகும். குடும்ப அமைப்பில் பெண் மீது ஆண் செலுத்தும் ஒடுக்குமுறை தான் முதல் வர்க்க பிரிவினையாகும், இந்த முரண்பாடுகள் தான் சமூகத்திலும் எதிரொலிக்கிறது.
- பிரெட்ரிக் எங்கெல்சு

விஞ்ஞானத்தில் நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு அதிகாரத்தை வழங்குவதை நிறுத்துங்கள்.
- ஹாரிசன் ஃபோர்டு

நாம் எப்போதும் நம்பிக்கையைத் தளரவிடாமல், மேலும் நல்லதைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
- கோபி அன்னான்

சில சமயங்களில், கண்களுக்கு தெரியாதது இதயத்துக்கு தெரிகிறது.
- ஹெச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர்

திருமண உறவில் தோல்வி காதலின்மையால் வருவதல்ல, நட்பின்மையால் வருவது.
- பிரெட்ரிக் நீட்சே

மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.
- மு. கருணாநிதி

நீங்கள் பெருங்கடலில் சிறுதுளி அல்ல, சிறுத்துளியில் முழு கடல்.
- ஜலால் அத்-டின் முஹம்மத் ருமி

வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் உள்ளது, அது காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்தான்.
- ஜார்ஜ் சாண்ட்

கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதைச் செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள்.
- யோகோ ஓனோ

ஒட்டுமொத்த மனித குலத்தின் கூட்டுப் பங்களிப்பால் உருவாக்கப்பட்டது இயற்பியல். அதில் கிழக்கு மேற்கு, தெற்கு வடக்கு அனைத்திற்கும் சமமான பங்கு உண்டு.
- அப்துஸ் சலாம்

என் அம்மா எப்போதும் என்னிடம் சொல்வது: வாழ்வதற்கான காரணம் எதையும் உன்னால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சாவதற்காக ஒரு காரணத்தை கண்டுபிடிப்பது மேல்.
- டுபக் ஷகூர்

பழக்கங்களை எளிதாக பெற முடியாது. அனுபவத்தின் மூலம் பெறப்படும் சோதனை மற்றும் துன்பங்களின் வழியாகவே ஆன்மாவை வலுவூட்டவும், லட்சியத்தை தூண்டவும், அதன்மூலமே வெற்றியை அடையவும் முடியும்.
- ஹெலன் கெல்லர்

சிறந்த ஐடியாக்கள் வேடிக்கைகளாகவேச் சிந்தனையில் வரும். முடிந்தவரை வேடிக்கையாகவே சிந்தியுங்கள்.
- டேவிட் ஒகில்வி

ஜனநாயகம் என்பது மக்களின் குண்டாந் தடியால் மக்களால் மக்களுக்காக அடிப்பது.
- ஆஸ்கர் வைல்ட்

படைப்பாற்றல் என்பது தவறுகள் செய்ய உங்களை அனுமதித்துக்கொள்வது. படைப்பு என்பது எந்த தவறை வைத்துக்கொள்வது என்பதைத் தெரிந்து கொள்வது.
- ஸ்காட் ஆடம்ஸ்

பரிசுகளை வெல்லும் எண்ணத்துடன் இயற்பியல் ஆராய்ச்சியில் யாரும் இறங்குவதில்லை. யாரும் அதுவரை அறியாத ஒன்றைக் கண்டுபிடிக்கும்போது ஏற்படும் அளவற்ற ஆர்வத்தினாலேயே அதைச் செய்கின்றனர்.
- ஸ்டீபன் ஹாக்கிங்

நம் திறன்களைத் திறப்பதற்கான சாவி தொடர் முயற்சிதானே தவிர, வலிமையோ அறிவு கூர்மையோ அல்ல.
- வின்ஸ்டன் சர்ச்சில்

பின்னாலுள்ள என் பாலங்களை நான் தகர்த்து விட்டேன்… அதன்பிறகு முன்னேறிச் செல்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.
- ஃப்ரைட்ஜோஃப் நன்ஸென்

விரக்தி, கசப்பு மற்றும் ஒரு விதமான உதவாத மனநிலையை வைத்துக்கொண்டு உன்னால் எதையும் செய்ய முடியாது.
- லேக் வலேஸா

நான் வாசித்த எல்லாவற்றையும் சேர்த்த ஒரு பகுதியே நான்.
- தியோடர் ரூஸ்வெல்ட்

ஒருவரின் பண்புகளை கருத்தில் கொள்ளாது திறமைகளை மட்டும் அதீதமாக மதிப்பிட்டதை, அநேகமாக எனது மிகப்பெரிய தவறென்று கருதுகிறேன். ஏனென்றால் நல்ல இதயம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியம்.
- எலன் மஸ்க்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.