* தேவையான சந்தர்ப்பங்களை தேடிப் பெறுபவர்கள் தான் வாழ்வில் முன்னேற்றம் காண்பர்.
* சந்தர்ப்பம் தானாக வரக்கூடியது அல்ல. மனிதன்தான் அதனைத் தானாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
* அறிவற்ற நண்பனிடம் சேர்வதை விடப் புத்திசாலியான விரோதியை அடைவது மேல்.
* அமைதியான வாழ்வே ஆனந்த வாழ்வு. அமைதியான உள்ளமே மகிழ்ச்சிக் கடலின் எல்லை.
* இன்பமும் துன்பமும் பணத்தைப் பொறுத்தவை அல்ல. மனதைச் சார்ந்தவை. பணமானது பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியைப் போக்காது.
* அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர். அது சோதனையைத் தந்த பிறகுதான் பாடத்தைச் சொல்லித் தருகிறது.
* நல்ல ஒழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன்மதிப்பாகும்.
* எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் மணம் செய்து கொள்வது ஒரு பெண்ணின் கடமையாகும். அதை எவ்வளவு காலம் தள்ளி வைக்க இயலுமோ அவ்வளவு காலம் தள்ளி வைப்பது ஓர் ஆணின் கடமையாகும்.
* அதிகமான பொருள்களைப் பெறுவதை வெட்கமானதாகக் கருதும் மனிதனே மரியாதைக்குரியவன் ஆகிவிடுகிறான்.
* நூல் நிலையம் என்பது மனித வாழ்வில் ஒரு ஆடம்பரமன்று, அது அவசியமான ஒன்று.
* உழைப்பால் களைப்பு அடைகிறவர்களே இன்பம் அடைகிறார்கள்.
* அரசியல்வாதிகள் இயற்றும் சட்டங்கள் அடிக்கடி மாறும், மாற்றப்படும். அறிவாளிகள் இயற்றும் நூல்கள் அமரத்துவம் வாய்ந்தவை, அழிவற்றவை.
* சிந்தனை என்பது நாம் விரும்பி மேற்கொள்ளும் கற்பனையே.
* விருப்பமில்லாது திணிக்கப்படும் கல்வி வேண்டாத உணவு.
* உயிர் உள்ள வரையில் உழைத்துச் சாக விரும்புகிறேன். உழைக்க உழைக்கத்தான் எனக்கு உயிர் வாழ விருப்பம் இருக்கிறது.
* தன் சொந்த மொழியில் முழுத்திறன் பெறாத எவனும் மற்ற மொழியில் திறன் பெற முடியாது.
* மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆனால் அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது.
* நாம் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
* உண்மையான அறிவின் வேலை நகைச்சுவையுடன் இணைந்ததே.
* வாழ்க்கையில் வெறுப்பை வெளிப்படுத்த சிறந்த வழி அமைதியாயிருப்பதே.
* அன்பு காட்டுவது, அறிவை பெறுவது; இரண்டிற்கும் வரைமுறை இல்லை. இரண்டும் எல்லையற்றவை.