* கெட்ட நேரமாக இருந்தால் ஒட்டகத்தின் மீது இருப்பவனைக் கூட நாய் கடிக்கும்.
* நாயோடு தாராளமாக நெருங்கிப் பழகலாம். ஆனால் கையிலுள்ள கழியை நழுவ விடாதே.
* வெளியே வருவதற்கு வழியைத் தெரிந்து கொண்டு உள்ளே நுழை.
* சம்பளமில்லாத மாதத்திற்கு நாட்கணக்குப் பார்க்க வேண்டாம்.
* சோதனைகள் மூலம் நல்லொழுக்கம் வளர்வதே ஆண்டவன் விருப்பம்.
* பண்பில்லாத இடத்தில் சுதந்திரம் இருக்க முடியாது.
* தன் குறைகளைக் கவனிப்பவனுக்குப் பிறர் குறைகளைப் பார்க்க நேரம் இராது.
* சத்தியத்திற்குக் கொம்புகள் உண்டு.
* உண்மை யென்ற பாணத்தை விடுமுன், அதன் முனையைத் தேனிலே தோய்த்துக் கொள்.
* உண்மை பொன்னினும் மேலானது.
* பொய் சொல்லுதல் மனித இயல்பு, அதை நம்புகிறவனுக்குத் தான் கேவலம்.
* பழக்கம் என்பது (ஐம்புலன்களுக்கு மேல்) ஆறாவது புலனாகும்; அது மற்றப் புலன்களையும் அடக்கி மேலெழுந்துவிடும்.
* மெளனம் என்ற மரத்தில் சாந்தி என்ற கனி தொங்குகின்றது.
* நான் (செவி கொடுத்துக்) கேட்டால், எனக்கு நன்மை; நான் பேசினால், பிறருக்குத்தான் நன்மை.
* இதயம் இரகசியங்களின் இருப்பிடம், உதடுகள் பூட்டுக்கள். நாவு அவைகளின் திறவுகோல்.
* நீண்டகாலச் சிறைத் தண்டனைக்கு உரியது நாவுதான்.
* இதயம் சொல்லாததையெல்லாம் வாய் அளந்துவிடும்.
* பொறுமையுள்ள மனிதன் வெற்றி பெறுவான்.
* பொறுமை கல்லையும் துளைக்கும்.
* ஒருவன் செய்த குற்றத்தையே மறந்துவிடுதல்தான் முழு மன்னிப்பாகும்.
* மற்றவரை மன்னிப்பவனே ஆண்டவன் மன்னிப்பான்.
* எந்த மன்னிப்பையும் ஏற்க மறுப்பவன் மக்களிலே இழிவான கயவன்; பாவத்திற்குப் பரிகாரம் தேடாதவன் எந்தக் குற்றத்தையும் மன்னிக்காதவன்.
* சோம்பேறி சைத்தானின் தோழன்.
* தூங்குபவனை எழுப்புவதற்காகப் பொழுது இருமுறை விடிவதில்லை.
* நீ விரும்பியதெல்லாம் உண்ணலாம், ஆனால் உடை மட்டும் மற்றவர்களைப் போலவே அணிந்து கொள்ள வேண்டும்.
* நண்பகலில் அரசன் அது நிசி என்ருல், நீயும் நட்சத்திரங்களைப் பார்.
* தீயதைச் சிந்தித்தலும் தீயதே.
* விலக்கப்பட்டவையெல்லாம் இனிமையானவைகளாகவேத் தோன்றும்.
* இன்பம் என்பது அன்பின் மகன், ஆனால் தந்தையாகிய அன்பையேக் கொல்லும் இன்பம் இயற்கையான மகனல்ல.
* விருந்தினன் நாத்திகனாயினும், அவனைக் கெளரவிக்க வேண்டும்.