* மற்றவர்களுக்குச் சுதந்திரத்தை மறுப்பவர்கள், அவர்களும் அதைப் பெறத் தகுதியற்றவர்கள்.
* நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால், எப்போதாவது ஏமாற்றமடைவீர்கள். ஆனால், நீங்கள் அவநம்பிக்கையுடன் இருந்தால் எப்போதும் பரிதாபமான நிலையில் இருப்பீர்கள்.
* பாதுகாப்புக்காகச் சுதந்திரத்தைத் தியாகம் செய்யத் தயாராக உள்ளவர்கள் இறுதியில் இரண்டையும் இழப்பார்கள்.
* நான் நல்லதைச் செய்யும்போது, நான் நன்றாக உணர்கிறேன். நான் கெட்டதைச் செய்யும்போது, நான் மோசமாக உணர்கிறேன். இதுவே எனது மதம்.
* ஒரு மரத்தை வெட்டுவதற்கு ஆறு மணிநேரம் அவகாசம் கொடுங்கள். நான் முதல் நான்கு மணி நேரம் கோடரியைக் கூர்மைப்படுத்துவேன்.
* ஒரு வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது.
* எதிர்ப்பது உங்கள் கடமையாக இருக்கும் போது, அமைதியாக இருப்பது பாவச்செயலாகும்.
* பணக்காரர்களை அழிப்பதன் மூலம் நீங்கள் ஏழைகளுக்கு உதவ முடியாது. கூலி கொடுப்பவரைக் கீழே இழுப்பதன் மூலம், நீங்கள் கூலி பெறுபவரை மேலே உயர்த்த முடியாது.
* மேகத்தின் பின்னால் இருந்தாலும், சூரியன் இன்னும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
* எதிரியை அழிக்கச் சிறந்த வழி அவரை நண்பராக்குவதுதான்.
* காத்திருப்பவர்களுக்கும் சில விடயங்கள் கிடைக்கக்கூடும், ஆனால் விரைந்து செல்வோர் விட்டுச் செல்லும் விடயங்கள் மட்டுமே.
* ஒரு மனிதனின் மேன்மையை எது அவனைக் கோபப்படுத்துகிறது என்பதை வைத்துக் கூற முடியும்.
* நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரிந்தால், நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை.
* சாதனைக்கு நிறம் ஏதும் இல்லை.
* எந்தவொரு மனிதனுக்கும் வெற்றிகரமாகப் பொய் சொல்பவனாக இருப்பதற்குத் தேவையான ஞாபகசக்தி இல்லை.
* நீங்கள் ஒரு வலிமையான மனிதனைப் பலவீனமாக்குவதன் மூலம், ஒரு பலவீனமான மனிதனை வலிமையாக்க முடியாது.
* அறிவு முடிவடையும் இடத்தில் வன்முறை தொடங்குகிறது.
* உதவி செய்ய இதயம் இருப்பவனுக்கே, விமர்சிக்க உரிமை உண்டு.
* நாம் ரோஜாச் செடிகளில் முட்கள் இருக்கிறது என்று குறை சொல்லிக் கொண்டிருக்கலாம், அல்லது முட்செடிகளில் ரோஜாக்கள் இருக்கிறது என்று மகிழ்ச்சியடையலாம்.
* எதிர்காலத்தைக் கணிப்பதற்கான மிகவும் நம்பகமான வழி அதை உருவாக்குவதுதான்.
* கிட்டத்தட்ட எல்லா மனிதர்களாலும் துன்பத்தைத் தாங்க முடியும், ஆனால், நீங்கள் ஒரு மனிதனின் குணத்தை மதிப்பிட விரும்பினால், அவனுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள்.
* கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்று எனக்கு அக்கறை இல்லை, கடவுளின் பக்கத்தில் நான் இருக்க வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய அக்கறை, ஏனென்றால், கடவுள் எப்போதும் சரியானவர்.
* சட்டப்பூர்வமாக, சரியான சில விஷயங்கள் ஒழுக்க ரீதியாகச் சரியானவை அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
* சிலர் மிகப் பெரிய வெற்றிகளை அடைகிறார்கள், மற்றவர்களும் அதை அடைய முடியும் என்பதற்கு இதுவே சான்று.