* சந்தோசம் வரும் போது அதைப்பற்றி சிந்தனை செய்யாதே; அது போகின்ற போது அதைப்பற்றிய சிந்தனை செய்.
* வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அது போலத்தான் உயர்வதும்.
* விமர்சனம் செய்பவனே நண்பன், கூழைக்கும்பிடு போடுபவனே முதல் எதிரி.
* அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது.
* கல்வியின் வேர்களோ கசப்பானவை, ஆனால் கனியோ இனிப்பானது.
* கல்வியும் நன்னடத்தையுமே ஒரு மனிதனை நல்லவனாக்குகின்றன.
* ஒரு குடிமகன் ஆள்பதற்கு மட்டுமல்ல, ஆளப்படுவதற்கும் தக்கவனாய் இருத்தல் வேண்டும்.
* ஒருவனுடைய மனம் தூய்மையாக இல்லாவிட்டால் பணமோ, வலிமையோ, அழகோ அவனுக்குப் பயன்படாது.
* கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
* முனிவரின் மூளையில் கூட, முட்டாள்தனம் ஒரு மூலையில் இருக்கும்.
* அவனவனுக்கு உரித்தானதை அவனவனுக்கு வழங்குவதுதான் நீதி.
* இரண்டாம் தரமான மனிதர்களைக் கொண்டு முதல் தரமான அரசாங்கத்தை உருவாக்க முடியாது.
* இரண்டு உடல்கள் வசிக்கும் ஒரு ஆன்மாவிற்காக உருவானதே அன்பு.
* கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
* அழகு உலகிலுள்ள எல்லா பரிந்துரைக் கடிதங்களையும் விட மேலானது.
* குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோர் பெற்றோர்களை விட பெருமதிப்புக்கு உரியவர்கள். பெற்றோர்கள் உயிர் மட்டுமே அளிக்கிறார்கள், ஆசிரியர்கள்தான் நல்வாழ்வு வாழும் கலையைக் கற்றுத் தருகிறார்கள்.
* கடினமான உழைப்பிற்கு ஆதாயம் என்ற தூண்டுதல் தேவைப்படுகிறது. ஆதாயம் இல்லை என்றால் கடின உழைப்பும் வீண்தான்.
* பகைவனை அடக்குபவனை விட, ஆசைகளை அடக்குபவனே வீரன்.
* அனைவருக்கும் நண்பராக இருப்பது என்பது உண்மையில் ஒருவருக்கும் நண்பராக இல்லாததைப் போன்றது.
* தேவையில்லாமல் நிறைய நண்பர்களை வைத்திருப்பவனுக்கு உண்மையில் நண்பர்கள் இல்லை.
* பைத்தியக்காரத்தனத்தின் கலவை இல்லாத ஒரு சிறந்த மேதை எவருமில்லை.
* உண்மையை கடைப்பிடிக்கும் மனிதன் அதிர்ஷ்டம் இல்லாதவனாக இருந்தாலும், வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்.
* நல்ல விஷயங்களைக் கிரகித்து அவற்றை நம்மிடையே நிலை பெற்றிருக்கச் செய்வதுதான் நற்பண்பு.
* தைரியம் இல்லாமல் உங்களால் இந்த உலகில் எதுவும் செய்ய முடியாது. மரியாதைக்கு அடுத்து மனதின் சிறந்த பண்பு இதுவே...!
* கலையின் நோக்கம் வெளிப்புற விஷயங்களை பிரதிபலிப்பதல்ல, உள்ளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவது.
* நம் எண்ணங்களுக்கு ஏற்றபடி வசதிகளை பெருக்குவதை விட, நம் வசதிகளுக்கு ஏற்றபடி எண்ணங்களை குறைக்க முயல்வது நல்லது.
* தனித்திறன் என்பது செயல் அல்ல, அது ஒரு பழக்கம்.
* தாய்மொழியைச் செம்மையாகப் பயன்படுத்தத் தெரியாத எவருக்கும் பிற மொழியில் நல்ல புலமை வராது.
* ஒரு நகரம் நல்ல சட்டங்களால் ஆளப்பெறுவதை காட்டிலும், ஒரு நல்ல மனிதனால் ஆளப் பெறுதல் மேலானதாகும்.