* மனிதனுக்கு மனிதன் சரியான உறவுகள் கொள்வதைத் தடுக்கின்ற எந்த ஒரு மதமும் மதமே அல்ல. அது அடக்குமுறையின் அடையாளமே.
* ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.
* உலகில் யாரும் தெய்வீகக் குணங்களுடன் பிறப்பதில்லை. ஒவ்வொருவரும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்துத்தான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது.
* ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
* உங்களின் வறுமை உடன் பிறந்தது, தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும்.
* நம்முடைய கனவுகளை லட்சியங்களை அடைய, இடையிலுள்ள தடை கற்களை உடைக்க வேண்டும்.
* நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது... உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை.
* மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் நிவர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்த பெயர் ஒரு போதும் தேவையில்லை.
* வெற்றியோ, தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கடமையைச் செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது எதிரியும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
* எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் விருப்பபடி செயல்படாமல், அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனேச் சுதந்திர மனிதன்.
* அறிவு, நன்னடத்தை, சுயமரியாதை, இவையே நான் வணங்கும் தெய்வங்கள் இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
* ஒருவன் அடிமைப்பட்டு இருந்தால், அவன் அடிமைப்பட்டு இருப்பதை உணர்த்தினாலே போதும். பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
* ஒரு மதம் விலங்குகளைத் தொடுவதை புனிதமாகவும், சக மனிதர்களைத் தொடுவதைத் தீட்டாகவும் கருத்துமாயின், அது மதம் அல்ல. அது கேலிக்கூத்து.
* தலைவிதி என்ற எண்ணமே, தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போகச் செய்கின்றது.
* குழந்தைப் பேறு சமயத்தில் பெண்கள் பட வேண்டியுள்ள வேதனைகளை, ஆண்கள் பட வேண்டியிருந்தால், அவர்களில் யாரும் வாழ்நாளில் ஒரு முறைக்குமேல் குழந்தை பெற இணங்க மாட்டார்கள்.
* பணம், பட்டம், பதவிகளுக்காக நாம் போராடவில்லை, நமது வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காவும், மனிதர்களாக வாழ்வதற்காவுமே போராடுகிறோம்.
* குருட்டு பக்தி தன்னறிவை இழக்கச் செய்யும், பகுத்தறிவை பயன்படுத்தாமல் யாருடைய வாக்குறுதியையும் நம்பக்கூடாது.
* கடவுள்தான் உலகத்தை உண்டாக்கினார்; மனிதனை உண்டாக்கினார் என்று சொன்னால், எல்லாம் அவன் செயல் என்று சொன்னால், அப்புறம் மனிதனுக்கு என்ன வேலை?
* சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள்.
* அடிபணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
* ஒருவன் நாணயமானவனாக இருக்கலாம். ஆனால், அவன்அறிவாளியாக இருந்தால் பயனில்லை. மாமனிதனுக்கு நேர் முரண் அறிவாளி.
* தாய்மொழியில் குறைந்தது ஆரம்பக் கல்வி கூடப் பெற முடியாத குழந்தைகளின் கல்வி மதிப்பற்றது, பொருளற்றது.
* நீதி நம் பக்கம் இருப்பதால், நாம் நமது போரில் தோல்வி அடைய வாய்ப்பில்லை.
* விதி என்று ஒன்று கிடையாது. மக்கள் மனதில் இப்படிப்பட்ட எண்ணம் அடியோடு களைந்து எறியப்பட வேண்டும்.
* ஒரு மனிதன் உன்னைக் கொல்ல வரும் போதும், ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சிக்கும் போதும், திருடுபவன் தப்பிக்க முயற்சிக்கும் போதும் வன்முறை நடந்தே தீரும்.
* தீண்டத்தகாத மக்களை உயர்த்தாமல் இந்த நாடு மேன்மை அடையாது.
* சிறந்த எதிர்காலத்தை உருவாக்க, தற்போதைய இன்பங்களைத் தியாகம் செய்து பாடுபடுங்கள். குறிக்கோளை எட்டும் வரை தீ போல் சுடும் கடும் துன்பங்களை ஏற்றுத் தியாகம் செய்யுங்கள்.
* சிந்தனை விடுதலையே அனைத்து விடுதலைக்கும் அடிப்படையானது.
* மகாத்மாக்கள் வந்தார்கள், மகாத்மாக்கள் மறைந்தார்கள். ஆனால், தீண்டாமை இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
* ஜாதியை ஒழிக்க நினைப்பவர்கள், ஜாதித் தலைவராக மாற்றப்படுவது மாறாதவரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.
* கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையை விட, ஏழைகளுக்குக் கொடுக்கும் கல்வி மேலானது.