* அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே.
* சாக்கடை என்பது மோசமான பகுதிதான். ஆனால் அப்படி ஒன்று இல்லாவிட்டால் ஊரேச் சாக்கடை ஆகிவிடும்.
* அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெற முடியாது, அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்.
* மீன் நீரிலே வாழ்வது ஆச்சரியமில்லை, அந்த நீரிலேயேக் கொதித்து சாவதுதான் ஆச்சரியம். மனிதனுக்கு நினைவுகள் இருப்பது ஆச்சரியமில்லை, அதிலேயே வெந்து மடிவது தான் வியப்பு.
* மனிதனுடைய திறமை பெரிதல்ல, கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது.
* கோடையில் குளம் வற்றிவிட்டதேஎன்று கொக்கு கவலைப்படக் கூடாது: மீண்டும் மழைக் காலம் வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குதிக்கக் கூடாது. அதோ, வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது.
* எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.
* நல்லவன் படகில் போகும் போது, துடுப்பு தண்ணீருக்குள் மூழ்கிவிட்டால், நதியேத் திசை மாறி அவன் சேர வேண்டிய இடத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.
* ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.
* இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியைக் கவனமாகக் கையாள வேண்டும். இதே மாதிரி எந்தப் பக்கமும் சேரக்கூடிய மனிதர்களோடு கவனமாக இருக்க வேண்டும்.
* நிரந்தரமானது துன்பம். வந்து போவது இன்பம். இதுதான் வாழ்க்கை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
* சிறகு கிடைத்தால் பறப்பது மட்டும் வாழ்க்கையல்ல. சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் வாழ்க்கை.
* துன்பங்களை வளர்ப்பதும் தனிமைதான். தணிப்பதும் தனிமைதான்.
* ஞானத்திற்கும் ஆணவத்திற்கும் சிறு வித்தியாசம்தான். நம்மிடம் ஏதுமில்லை என்று நினைப்பது ஞானம். நம்மைத் தவிர ஏதுமில்லை என்று நினைப்பது ஆணவம்.
* தேவைக்கு மேல் பணமும், திறமைக்கு மேல் புகழும், உழைப்புக்கு மேல் பதவியும் கிடைத்து விட்டால், பார்வையில் படுவது எல்லாம் சாதாரணமாக தான் தெரியும்.
* கட்டுக்காவல் எங்கேப் பலமாக இருக்கிறதோ, அங்கேதான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன.
* ஒன்று தவிர்க்க முடியாது எனும் போது, அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானேத் தீர வேண்டும்.
* சந்தர்ப்பம் வாய்க்காத திறமையும், திறமை இல்லாதவனுக்கு கிடைக்கும் சந்தர்ப்பமும் பயன்படுவதில்லை.
* எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சம்பாதித்தப் பணத்தை அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.
* குளிக்கும் அறையில் மெதுவாகச் செல்லவில்லையெனில் வழுக்கி விழுவாய். வசதியாக இருக்கும் போது ஜாக்கிரதையாக வாழவில்லையெனில் கடனில் வழுக்கி விடுவாய்.
* நிலத்தில் வரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை, அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.
* நான் என்று நினைக்காதீர்கள், நினைத்தால் இறைவன் தான் என்பதைக் காட்டி விடுவான்.
* அளவுக்கு மிஞ்சிய சாமர்த்தியம், முட்டாள்தனத்தில் போய் முடியும்.