பேசுவதை விடக் கேட்பதே மேல்
விஷயமில்லாத பொழுது விஷயமில்லை என்பதை வெளிக் காட்டாதவன் பாக்கியவான்.
- ஜார்ஜ் எலியட்
எறும்பைப்போல் உபதேசிப்பவர் யாருமில்லை; ஆனால் எறும்போ பேசுவதே இல்லை.
- பிராங்க்ளின்
பேசாத மொழி உறையிலுள்ள வாள். பேசிவிட்டால் வாளைப் பிறன் கையில் கொடுத்து விடுகிறாய்.
- குவார்ல்ஸ்
மூடனுக்கு 'மேளனமாயிரு' என்பதை விட உயர்ந்த உபதேசம் கிடையாது. அதன் நன்மையை அறிந்து விட்டால் அவன் மூடனாயிரான்.
- ஸா அதி
மெளனம் என்பது மூடர்கள் பெற வேண்டிய அறிவு. அறிஞர் குணங்களில் ஒன்று.
- பாய்லோ
சகல குணங்களிலும் மெளனம் சிறந்ததாகும். அதன் மூலம் பிறர் குறைகளை அறியவும் நம் குறைகளை மறைக்கவும் முடியும்.
- ஜீனோ
ஒருவனைச் சந்தித்தால் அவன் வாய் திறவாதிருந்தால் அவனை அறிவுமிகுந்தவன் என்று எண்ணுவேன். இரண்டாம் முறையும் பேசாதிருந்தால் ஜாக்கிரதை உடையவன் என்று கருதுவேன். ஆனால் மூன்றாம் முறையும் மெளனம் சாதித்தால் அறிவு சூன்யம் என்று சந்தேகிப்பேன்.
- கோல்ட்டன்
இரண்டு காதிருந்தும் ஒரு நாவே இருப்பதால் பேசுவதை விடக் கேட்பதே அதிகமாயிருக்க வேண்டும்.
- பழமொழி
இன்சொல் கூறுதல் எளிதே. ஆனால் தீயசொல் கூறாதிருக்க மெளனம் ஒன்றே தேவை. அதற்கு விலையொன்றும் தரவேண்டியதில்லை.
- டிலட்ஸன்
அறிவு,மெளனம் கற்பிக்கும்; அன்பு பேசக் கற்பிக்கும்.
- ரிக்டர்
முட்டாளின் உயர்ந்த ஞானம் மெளனம். அறிஞனின் பெரிய சோதனை பேச்சு.
- குவார்ல்ஸ்
அறிவுள்ளவனே நாவைக் காக்கும் ஆற்றலுள்ளவன்.
- லுக்காஸ்
மொழியாத மொழி ஒருநாளும் தீங்கு செய்வதில்லை.
- காஸத்
காலமறிந்து மெளனமாயிருத்தல் கடினமான பாடமே. ஆனால், வாழ்வில் அறியவேண்டிய பாடங்களில் அதுவும் ஒன்றாகும்.
- செஸ்ட்டர்பீல்டு
மெளனமாய் இருக்க முடியாதவன் பேசுவது எப்படி என்பதை அறியான். செய்வது எப்படி என்பதையோ, அதை அறியவே மாட்டான்.
- லவாட்டர்
அறிஞர் சில மொழிகளில் பல கூறிவிடுவர். மூடர் பலமொழிகளில் சிலவே கூறுவர்.
- ரோஷிவக்கல்டு
பயனில் சொல்லுக்குப் பொறுப்பாவதுபோல் பயனில் மெளனத்துக்கும் பொறுப்பாவோம்.
- பிராங்க்ளின்
நா தான் மனிதனிடமுள்ள நல்ல அம்சம் கெட்ட அம்சமும் அதுவேதான். அது நம் வசமானால் அதைவிட உயர்ந்த பொருளில்லை. நாம் அதன் வசமானால் அதைவிடத் தீய பொருளில்லை.
- அனார்காரிஸ்
பேச்சு பெரியதே. ஆனால் மெளனம் அதனினும் பெரியதாகும்.
- கார்லைல்
வாள் தரும் புண்ணினும் நா தரும் புண்ணே கொடியது. வாள் தரும் புண் உடலை மட்டுமேப் பாதிக்கும், நா தரும் புண்ணோ ஆன்மாவையும் பாதித்துவிடும்.
- பித்தகோரஸ்
இதயமே தீயனவற்றின் உற்பத்திசாலை, தீயனவற்றை விற்குமிடம் நா.
- லெய்ட்டன்
உபயோகிக்க உபயோகிக்க அதிகக் கூர்மை பெறும் ஆயுதம் தீய நா ஒன்றே.
- இர்விங்
அறிவு பெற விரும்பினால் நாவை அடக்கும் அறிவைப் பெறுவாய்.
- லவாட்டர்
நாவைப் பரிசோதித்து வைத்தியர் உடல் நோயை அறிவர். அறிஞர் ஆன்ம நோயை அறிவர்.
- ஜஸ்ட்டின்
பிறர் நாவை தாம் அடக்க முடியாது; ஆனால் பிறர் மொழிகளை நாம் அலட்சியம் செய்யமுடியும்.
- கேட்டோ
- பகவான் ஸ்ரீரமணர்
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.