* கடவுளுக்கு அஞ்சு. அடுத்தபடியாகக் கடவுளுக்கு அஞ்சாதவனைக் கண்டு அஞ்சு.
* நெருக்கடி நேரும்போது ஒருவன் முதலில் கடவுளிடம் திரும்புகிறான், பிறகு கடன் கொடுப்பவனிடம் திரும்புகிறான்.
* தேவை ஏற்பட்டால் கடன் கொடுப்பவனிடமும், கஷ்டம் நேர்ந்தால் பாதிரியாரிடமும், பயம் வந்தால் கடவுளிடமும் செல்வது மக்களின் வழக்கம்.
* திருமணம் செய்து கொண்டால் ஒரு வாரம் சுகமா யிருக்கலாம்; ஒரு பன்றியை அடித்தால் ஒரு மாதம் சுகமாயிருக்கலாம்; பாதிரியாகி விட்டால், வாழ்க்கை முழுதும் சுகமாயிருக்கலாம்.
* சைத்தான்களிலே கழிவான சைத்தான் தொழுது கொண்டிருப்பான்.
* குல்லாவுக்காகப் பிறந்தவன் கிரீடத்திற்கு ஆசைப்படக் கூடாது.
* வாழ்க்கையில் அழுதவன் சிரித்துக் கொண்டே சாவான்.
* ஒர் ஆந்தை வெளியே வந்து விட்டால் மற்ற இரண்டு பின் தொடரும்.
* பிரமச்சாரியும் நாயும் எதையும் செய்யலாம்.
* நூறு தெள்ளுப் பூச்சிகளைக் காத்துவிடலாம், ஒரு கன்னியைக் கட்டிக் காப்பது கஷ்டம்.
* ரொட்டியும் உப்பும் இல்லாவிட்டால், காதல் இருக்க முடி யாது.
* காதல் முதலில் ஆடவனின் கண் வழியாகவும், பெண்ணின் காது வழியாகவும் நுழைகிறது.
* முதன்மையான அன்பு தாயன்பு, அடுத்தது நாயன்பு; அதற்கும் அடுத்தது காதலியின் அன்பு.
* காதைக் கொண்டு பெண்ணைப் பார், கண்ணைக் கொண்டு பார்க்க வேண்டாம்.
* ஒவ்வோர் ஆதாமுக்கும் ஒர் ஏவாள் இருப்பாள்.
* ஒரு மதுக்கிண்ணமும் பெண்ணும் அருகிலிருந்தால், ஒருவனுக்குப் பொழுது போவது தெரியாது.
* ஒருவன் மணந்து கொள்வது நல்லதுதான், ஆனல் மணமில்லாதிருப்பது அதை விட நல்லது.
* திருமணம் செய்வதற்கு முன்பு மூன்று வருடம் இஷ்டம் போல் வாழ்க்கை நடத்திக்கொள்.
* பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னால் அழுவாள், ஆடவன் பின்னால் அழுவான்.
* வயோதிகனுக்கு வாய்த்த இளம் மனைவி அவன் நரகத்திற்கு ஏறிச் செல்லும் குதிரை.
* தாய் தன் குழந்தையைத் தழுவினால், அனாதைக் குழந்தையை ஆண்டவர் தழுவிக் கொள்கிறார்.
* நம் உறவினர்கள் செழிப்பாயிருப்பார்களாக; நாம் அவர்களிடம் செல்லாமல் இருப்போமாக!
* சைத்தான் தான் சாதிக்க முடியாத வேலைக்கு ஒரு கிழவியை அனுப்புவான்.
* நோயைக் கொன்றாலும், ஆளைக் கொன்றாலும் வைத்தியருக்குக் கட்டணம் உண்டு.
* அளவில்லாவிட்டால், மருந்தும் விஷமாகும்.
* காலணி தேய்வை விடப் பாதங்கள் தேய்வது நலமென்றே செல்வர்களும் ஏழைகளும் சேர்ந்து சொல்லுகிறர்கள்.
* நீ இனிமையாயிருந்தால் உன்னை உள்ளே விழுங்கி விடுவார்கள்; நீ கசப்பாயிருந்தால் உன்னை வெளியேத் துப்பிவிடுவார்கள்.
* எசமானருக்கு ஜலதோஷம், வேலைக்காரர் அனைவரும் தும்முகிறார்கள்.
* அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
* பணக்காரனாக வேண்டுமானல், ஒருவன் பன்றியாகி விட வேண்டும்.
* ரொட்டியில்லாதவனுக்குக் குழந்தைகளும் இருக்கக் கூடாது.
* ஏழைகளுக்கு எப்பொழுதும் இருள்தான், எப்பொழுதும் மழைக்காலம்தான்.
* கண்ணீரோடு வழியனுப்புபவன் ஆனந்தத்தோடு வரவேற்பான்.
* உலோபி எதிர்காலப் பிச்சைக்காரன், அற்பன் எப்பொழு தும் இரப்பாளி.
* நன்றி என்பது வானுலகம் போய்விட்டது, போகும்போது ஏணியையும் எடுத்துவிட்டது.
* நம்பிக்கை இழுத்துச் செல்லும் வண்டிக்கு வறுமைதான் சாரதி.
* சந்தேகத்தில் தொடங்கித்தான் பின் உறுதியான நம்பிக்கை ஏற்படுகிறது.
* மூடர்களை உற்பத்தி செய்ய விதை விதைக்க வேண்டியதில்லை; அவர்கள் தாமாகவே முளைக்கிறார்கள்.
* பழமொழிகள் வீண் வார்த்தைகள் அல்ல.
* மணி ஓசை பெரிதாய்க் கேட்பதன் காரணம், மணி காலியாயிருப்பது.
* நல்லவன் சத்திரத்தில் தங்கினால் கெடுவதுமில்லை, தீயவன் ஆலயத்திற்குப் போனால் திருந்துவதுமில்லை.
* ஆணியைக் கொண்டு ஆணியை அறைய முடியாது.
* ஒரு கிண்ணம் மது வேண்டாமென்று சொல்லித் தப்பிக் கொள்வதற்குள், இரண்டு கிண்ணம் குடித்துவிடலாம்.
* முட்கள் இல்லாவிட்டால், கடிகாரம் பயனற்றது.
* மையை உபயோகிக்காவிட்டால் காய்ந்துவிடும்.
* கூட்டு வியாபாரத்தைக் கண்டுபிடித்தவன் சைத்தான்.
* வாயாடிகளுக்கு ஒர் இரகசியம் பாரமாயிருக்கும்.
* முதலில் கிடைத்த லாபத்தை விடாது பிடித்துக் கொள்.
* குடியானவன் ஏழையாயிருந்தால், நாடு முழுவதும் ஏழையானதுதான்.
* எல்லோரும் சேர்ந்து ஒரு பொருளைப் பாதுகாத்தால், அது விரைவில் மறைந்துவிடும்.
* மற்றவர் வண்டியில் ஆசை வைத்தால், பாதி வழி நடக்க வேண்டும்.
* இலவசமாக ஒன்றைப் பெற்றுக் கொள்வதில், உன் சுதந்தரம் குறைகின்றது.
* உனக்கு ஓய்வு வேண்டுமானல், இராணுவத்தில் சேர்.