* தொடர்ந்து கேட்டுக் கொண்டிருங்கள். தேவன் உங்களுக்குக் கொடுப்பார். தேடிக் கொண்டே இருங்கள். நீங்கள் தேடியதைக் கண்டறிவீர்கள். தொடர்ந்து தட்டிக் கொண்டே இருங்கள். கதவு உங்களுக்காகத் திறக்கப்படும். ஆம், ஒரு மனிதன் தொடர்ந்து கேட்டால், அவன் பெற்றுக் கொள்வான். ஒரு மனிதன் தொடர்ந்து தேடினால், அவன் தேடியதை அடைவான். ஒரு மனிதன் தொடர்ந்து தட்டினால், கதவு அவனுக்காகத் திறக்கப்படும்.
* புத்திசாலியான மகன் தந்தையை மகிழ்விக்கிறான். ஆனால், புத்தியில்லாத முட்டாளோ தாய்க்குப் பாரமாயிருக்கிறான்.
* பாம்புகளைப் போல விவேகமும், புறாக்களைப் போல கபடமில்லாமலும் இருங்கள்.
* கிழட்டு முட்டாள் ராஜாவாய் இருப்பதை விட, புத்திசாலியான ஏழைக் குழந்தையாய் இருப்பது சிறந்தது.
* அறிவில்லாத மனிதன் கவுரவம் உள்ளவனாய் இருந்தாலும், அழிந்து போகும் மிருகங்களுக்குச் சமமானவனாயிருக்கிறான்.
* உங்களை நேசிக்கிறவர்களை மட்டும் நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களை விட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட முழுமையானவராயிருப்பது போல நீங்களும் முழுமையானவராக இருக்க வேண்டும்.
* விண்ணிலிருந்து வரும் அறிவானது முதலில் தூய்மையானது. பிறகு அமைதியானது. கண்ணியமானது. இணக்கமுள்ளது. நற்கனிகளும், கருணையும் நிறைந்தது. பாரபட்சமோ பாசாங்கோ அதற்கு இல்லை.
* ஒருவன் தன் நண்பர்களுக்காகத் தன் உயிரைக் கொடுப்பதை விடப் பெரும் அன்பு எவனிடத்திலும் இல்லை.
* பகைவரிடம் அன்பு காட்டுங்கள். உங்களைச் சபிப்பவரை வாழ்த்துங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
* கண்ணீருடன் விதைப்பவர்கள் மகிழ்ச்சியுடன் அறுவடை செய்வர்.
* மனிதன் எதை விதைக்கிறானோ, அதன் விளைச்சலையே அறுவடை செய்வான்.
* மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தி விடுகிறது. கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனதில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை, விபசாரம், சுயநலம், தீயச் செயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை.வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.
* எவனொருவன் தன்னைத் தானே தாழ்த்திக்கொள்கிறானோ, அவன் பிறரால் உயர்த்தப்படுவான்.
* கோபமும் பொறாமையும் மனிதனைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவை.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும் போதேச் செய்.
* செல்வத்திடம் இருக்கும் பேராசைதான், தீமைகள் அனைத்திற்கும் காரணம்.
* கவலைப்படுவதன் மூலம் உங்களில் எவரும் ஒரு முழம் கூட உயர்ந்து விட முடியாது.
* உறவுகள் நம்மை கைவிடலாம் ஆனால் நம்மை உருவாக்கிய இயேசு கைவிடமட்டார்.
* நாளை பற்றி கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் நாளை அதன் சொந்த கவலையை ஏற்படுத்தும். இன்றைய பிரச்சனை இன்றைக்கு போதும்.
* நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும், உறுதியும் கொண்டிருங்கள். நம்பிக்கை இல்லாத இதயமுள்ளவன் கடவுளை விட்டு விலகியிருக்கிறான். இத்தகைய இதயம் உங்களில் எவருக்கும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
* பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில், நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள். ஆனால், மெய்யான வாழ்விற்குச் செல்லும் வாசல் மிகவும் குறுகியது. மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது. மிகச் சிலரே அப்பாதையைக் கண்டறிகிறார்கள்.