* கோயிலுக்குள்ளே செல்லும் பொழுது. உலகை வெளியே விட்டுச் செல்லுங்கள்.
* இழந்துபோன பொருள் இறைவனுக்கு அர்ப்பணம்.
* பிரார்த்தனையால் கிடைக்கும் பொருளுக்கு மேலாக அருமையானது எதுவுமில்லை.
* நல்ல பாதிரியாரின் நட்பும் வேண்டாம், கெட்டவரின் பகையும் வேண்டாம்.
* விதி சிலரைத் தன் சிறகுகளில் தூக்கிச் செல்லும், சிலரைத் தரையிலே போட்டு இழுத்துச் செல்லும்.
* அதிருஷ்டம் வரும்போது முண்டிக் கொண்டு வரும்.
* இளமையான பசு கிடைக்கும் பொழுது, கயிறு தயாராயிருக்கட்டும்.
* பல ஈக்கள் சேர்ந்து ஒரு கழுதையைக் கொன்று விடும்.
* உருகாத மெழுகு கிடையாது.
* மரணம் வரும் வரையில் எல்லாம் வாழ்க்கைதான்.
* சேவல் தன் குப்பை மேட்டிலிருந்துதான் கூவும்; கோழி ஊரெங்கும் சுற்றிக் கூவிவரும்.
* அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்தே வரும்.
* தன் முகத்தைப் பற்றியேப் பெருமைப்படும் பெண்ணால் வீடு பாழாகும்.
* காதல் வெட்கப்பட்டால், அது உண்மையானதன்று.
* உனக்கு நல்ல மனைவி வேண்டுமானல், அவளை ஞாயிற்றுக் கிழமையில் தேர்ந்தெடுக்காதே.
* திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும், ஒரு விலாங்கும் இருக்கும்.
* அடுப்படியிலே அடைகாக்கும் கணவன் விலாப்பக்கத்து வலி போன்றவன்.
* கணவனைத் தெரிந்து கொள்ள மனைவியின் முகத்தைப் பாருங்கள்.
* ஒரு மனிதனின் அதிருஷ்டமோ, துரதிர்ஷ்டமோ மனைவிதான்.
* திருமணமான மனிதன் ஒவ்வொருவனும் தன் மனைவி ஒருத்தி தான் உலகிலே நல்லவள் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.
* வீட்டை விட்டு ஓடுபவன், வீட்டுக்கேத் திரும்பி வருவான்.
* விருந்தினரின் முதுகுப்புறம்தான் அழகு.
* ஒரு வேளை உணவை இழத்தல் நூறு வைத்தியர்களை அழைப்பதை விட மேலானது.
* ஒவ்வொரு நோய்க்கும் வைத்தியரை நாடவேண்டாம்; ஒவ்வொரு வழக்குக்கும் வக்கீலை நாடவேண்டாம்.
* நன்மை செய்வதில் நோக்கத்தை விடச் செயல்தான் முக்கியம்; தீமையில் செயலை விட நோக்கமே முக்கியம்.
* பலர் முகர்ந்த ரோஜாவில் மணம் இராது.
* பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது; பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது.
* பணத்தை முன்னால் கொடுத்துவிட்டால், வேலை சிறிது காலதாமதமாகும்.
* தீய வாழ்க்கையே ஒருவகை மரணமாகும்.
* துக்கத்தைப் பாடித் தள்ளுங்கள்.
* பரிசுகள் பாறைகளை உடைக்கும்.
* கொடுப்பதற்கும் சேமிப்பதற்கும் அறிவு வேண்டும்.
* நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம்.
* உண்ட உணவு உடனே மறந்து போகும்.
* கடவுள் ஏழையை நேசிப்பார், ஆனல் அசுத்தமானவனை நேசிக்க மாட்டார்.
* முதலில் கேட்டுக் கொண்டு. பிறகு பேசு.
* கண்கள் மட்டும் இருப்பவர்கள் இருட்டில் குருடர்களாயிருக்கிறார்கள்.
* மூடனுக்கும் காளை மாட்டுக்கும் வழிவிட்டு விலக வேண்டும்.
* மனிதனின் அறிவை இழக்கச் செய்பவை நான்கு: பெண் பிள்ளை, பொடி, சீட்டுக்கட்டு, மது.
* ஒவ்வொரு மூடனும் ஒரு கழியுடன் நடக்கத் தொடங்கினால், விறகுப் பஞ்சம் வந்துவிடும்.
* இசையுள்ள இடத்தில் கெடுதல் இராது.
* மாடு தொலைந்தவனுக்கு மணி ஓசை கேட்டுக் கொண்டேயிருக்கும்.
* உண்மை உலராமல் ஈரமாகவே இருக்கும்.
* பொய் எப்பொழுதும் ஆயுதபாணியாயிருப்பினும், தோல்லி அதற்குத்தான்.
* செருக்கினால் ‘இல்லை’ என்றும், பலவீனத்தால் ‘சரி’ என்றும் ஒருபோதும் சொல்லாதே.
* கெட்ட பழக்கத்தின் காலை ஒடி.
* பணப்பைக்குத் தக்கபடி, வாயை அடக்கிக்கொள்.
* அதிகப் பேச்சாளர் இருவர் நெடுந்துாரம் சேர்ந்து போக முடியாது.
* வாளி நிறையவுள்ள நீரைப் பார்க்கினும், ஒரு நல்ல சொல் அதிகத் தீயை அணைக்கும்.
* கடவுளைத் தொழு; ஆனல் சம்மட்டியை நிறுத்தாதே.
* நல்ல இதயம் துரதிருஷ்டத்தைத் தகர்த்து விடும்.
* இதயமே உடலைத் தாங்குகின்றது.
* தன்னைத்தானே வெல்பவனே தலைச்சிறந்த வீரன்.
* அச்சம் அறிவுக்கு ஆரம்பம்.
* கோழையும் கோழையும் எதிர்த்தால், முதலில் தாக்கியவன் ஜெயிப்பான்.
* அச்சம் இதயத்தின் சிறை.
* நரிக்காகச் சிங்கம் வேட்டையாடாது.
* உயர்ந்த ஆடையில்தான் விரைவில் அழுக்குப்படும்.
* இன்று செய்த நன்மை நாளைய இன்பம்.
* இரகசியமாகக் கொள்முதல் செய்து, வெளிப்படையாக விற்க வேண்டும்.
* ஒரு தொழிலுள்ளவன் உலகைச் சுற்றலாம்.
* இரகசியப் பேச்சு இல்லாத வீடே இல்லை.
* வாளியைப் போட்டுவிட்டுக் கயிற்றையும் இழக்க வேண்டாம்.
* சொற்ப நஷ்டம் திடுக்கிடச் செய்யும், பெரு நஷ்டம் பழகிப் போகும்.
* எது நன்மை என்பது, அதை இழந்தால்தான் தெரியும்.
* சிக்கனம் இருந்தால், மற்ற நல்ல பண்புகள் யாவும் வந்துவிடும்.
* செழிப்பு தாயையும் தந்தையையும் மறக்கச் செய்யும்.
* குடியானவனைக் குதிரைமேல் ஏற்றிவை, அவன் கடவுளையும் மறந்து, மனிதனையும் மறந்து விடுவான்.
* கடன்காரர்களை விடக் கடன் கொடுத்தவர்களுக்கு நினைவு அதிகம்.
* நோயாளிக்காவது உறக்கம் உண்டு; கடன்காரனுக்கு அதுவுமில்லை.
* நிறைந்த வயிற்றுடன் ஒடவும் முடியாது. சண்டைபோடவும் முடியாது.
* ஒவ்வொரு போரும் எங்கே தொடங்க வேண்டுமோ அங்கே முடிவடைகிறது.
* போரைப் பற்றிப் பேசுங்கள், ஆனல் போர் செய்யவேண்டாம்.