அமெரிக்க எழுத்தாளரான ஒரிசன் ஸ்வெட் மார்டன் என்பவர், தனது எழுத்துகளில் வாழ்க்கையில் வெற்றி பெறுவது தொடர்பான பல்வேறு ஊக்கமூட்டும் கருத்துகளை எழுதுவது வழக்கம். இவரது எழுத்துகளில் பொது அறிவுக் கொள்கைகள், நல்லொழுக்கம் குறித்த சிந்தனைகளும் மேலோங்கியதாக இருக்கும். அவர் கூறியிருக்கும் இந்த 14 பொன்மொழிகள் வாழ்க்கையின் வெற்றிக்கு உதவக்கூடும்.
1. அதிகமாகப் பெறுவதற்கு, நாமும் அதிகமாகக் கொடுக்க வேண்டும்.
2. பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர். பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்.
3. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் குழந்தைதான் வெற்றி.
4. ஒருவரின் தோல்விகளைக் கண்டு, அவரை அளவிட முடியாது.
5. நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து எதுவும் இல்லை.
6. ‘உங்கள் வாடிக்கையாளர் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள்’ என்பதே ஒவ்வொரு தொழிலதிபருக்குமான சிறந்த விதி.
7. பெரும்பான்மையான மனிதர்கள், தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் பல தோல்விகளைக் கண்டு, கடைசியாக வெற்றியைப் பெற்றிருக்கின்றனர்.
8. ஒரு சரியான அமைப்பு, இலக்கை அடைவதற்கான தூரத்தின் அளவைக் குறிக்கும்.
9. நம் எண்ணங்கள் மற்றும் கற்பனை ஆகியவை மட்டுமே நமது சாத்தியக்கூறுகளுக்கான உண்மையான வரம்புகளாகும்.
10. அசாதாரணமான வாய்ப்புகளுக்குக் காத்திருக்காமல், பொதுவான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அவற்றைச் சிறந்ததாக மாற்றுங்கள்.
11. ஒரு வலிமையான, வெற்றிகரமான மனிதன் தன் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுபவனல்ல. அவன், தனக்கான, சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்கிறான்.
12. ஒரு விருப்பம்தான், அதற்கான வழியைக் கண்டறிகிறது.
13. நம்முடைய சோதனைகள், துக்கங்கள் மற்றும் வருத்தங்கள் போன்றவையே நம்மை வளரச் செய்கின்றன.
14. தன்னுடைய துணிவு, சுயமரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் செயல்படுபவனுக்குத் தோல்வி என்று எதுவும் இல்லை.