நம்பிக்கை எதுவரை இருக்கும்?
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
- அப்துல் கலாம்
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- மார்டின் லூதர் கிங்
நமக்கு பிரியமானவைகளுள் நம்பிக்கையே மிகவும் நன்மை தருவது. அடிக்கடி அது ஏமாற்றத்தில் முடியாமலிருந்தால், வாழ்வை நீடிக்கச் செய்வது. நன்மை வருமென்று அது ஆவளை அளித்துக் கொண்டேயிருக்கும்.
- போப்
நம்பிக்கை ஒரு மயக்கம். எந்தக் கையாலும் ஓர் அலையையோ, ஒரு நிழலையோ பற்றிக்கொள்ள முடியாது.
- விக்டர் ஹியூகோ
நம்மை மனிதராக்குபவை மாபெரும் நம்பிக்கையே.
- டென்னிஸ்
எல்லா விஷயங்களிலும் ஏக்கமுறுவதை விட நம்பிக்கை கொள்வதே நலம்.
- சதே
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்; முட்கள் இல்லை.
- டிக்கன்ஸன்
ரோஜா மலரும் போதே அழகு மிகுந்திருக்கும்; அச்சம் அகலும் போது அரும்பும் நம்பிக்கையே அதிக உள்சானம் அளிப்பதாகும்.
- ஸ்காட்
மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே.
- மார்ட்டின் பூபெர்
நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தவிர, நலிவோர்க்கு வேறு மருந்து கிடையாது.
- ஷேக்ஸ்பியர்
காருக்குப்பின் வேனில், இரவுக்குப் பின் பகல்; புயலுக்குப் பின் அமைதி.
- அக்கம்பிஸ்
நம்பிக்கையே மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மலிவான சஞ்சீவி.
- கெளலி
இரவில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அநேக சமயங்களில் காலையில் எல்லாம் சரிப்பட்டுப்போகும்.
- ஆவ்பரி
நம்பிக்கையே துக்கத்தால் ஏற்பட்ட கறையைப் போக்கும்.
- மூர்
எல்லா மொழிகளிலும் அதிக துக்ககரமானவை, ‘அப்படிச் செய்திருந்தால்' என்னும் மொழிகளே.
- விட்டியர்
ஆகாயத்தில் கட்டும் அரண்மனைகளை அழியாது வைத்திருக்க அதிகமான பொருள் தேவை.
- புல்வெர் லிட்டன்
நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலைமையில் காணும் கனவு.
- பிளினி
நம்பிக்கை என்பது ஒருநாளும் இதயத்திலிருந்து அழிந்து போவதில்லை. மனிதன் என்றும் ஆசீர்வதிக்கப்பட வேண்டியவனேயன்றி ஆசீர்வாதம் தருபவனல்லன்.
- போப்
நம்பிக்கை நடத்தும் விருந்துக்குச் செல்ல விரும்பாதவர் கிடையார்.
- காஸ்காயின்
நம்பிக்கை எதிர்காலத்துக்கு ஒளி தரும்; ஞாபகம் இறந்தகாலத்துக்கு முலாம் பூசும்.
- மூர்
நம்பிக்கை என்பது அதிர்ஷ்ட தேவதை நடத்தும் ஏமாற்று லாட்டரியாகும். அதில் நூற்றுக்கு ஒருவர்க்கே பரிசு உண்டு.
- கெளலி
உயிருள்ளவரை நம்பிக்கையும் இருந்து கொண்டிருக்கும்.
- கே
சாத்தியம் என்று நம்புவோர்க்கே எதுவும் சாத்தியமாகும்.
- வெரிஜில்
உன்னையே நீ நம்பு.
- நிக்கோலோ மாக்கியவெல்லி
நன்மைகள் ஏற்படுமென்று நம்பிக்கொண்டிருக்கும் நேரம் எல்லாம். வெற்றிபெறும் நேரத்தை விட அதிக மகிழ்ச்சி தருவதாகும்.
- கோல்டுஸ்மித்
சிறு ஆன்மாவுக்குப் பெரிய நம்பிக்கை ஏற்படுவதில்லை.
- ஜே. எல். ஜோன்ஸ்
முறையாகச் சொல்வதானால், மனிதன் நம்பிக்கையையே ஆதாரமாய்க் கொண்டவன். நம்பிக்கையைத் தவிர, அவனுக்கு வேறு உடைமை கிடையாது. அவனுடைய இந்த உலகமே நிச்சயமாக நம்பிக்கைக்கு ஏற்ற இடம்.
- கார்லைல்
ஏழைகளுக்கு நம்பிக்கையைத் தவிர வேறு மருந்தில்லை.
- ஷேக்ஸ்பியர்
உண்மையான நம்பிக்கை வேகமுள்ளது. குருவியை விட அது வேகமாய்ப் பறக்கும். அரசர்களை அது தேவர்களாக்கும். சாதாரணமானவர்களை அர்சர்களாக்கும்.
- ஷேக்ஸ்பியர்
விழிப்போடிருப்பவர்கள் காணும் கனவுதான் நம்பிக்கை.
- பிரைப
நம்பிக்கையில்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.
- ஜான்ஸன்
நம்பிக்கையைப் பெருக்கக்கூடியது எதுவும் தைரியத்தையும் உயர்த்தும்.
- ஜான்ஸன்
நான் நம்பிக்கையால் வாழ்கிறேன். இந்த உலகத்திற்கு வரும் எல்லோரும் அப்படித்தான் என்று நான் எண்ணுகிறேன்.
- ராபர்ட் பிரிட்ஜில்
நம்பிக்கையே வாழ்வு. வாழ்வே நம்பிக்கை.
- அடிலி ஷீரீட்
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.