அளவில்லாத ஆசை என்னவாகும்?
பிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்!
– புத்தர்
கடந்ததைப் பற்றி வருந்தாதே! வருவதைப் பற்றி கற்பனை செய்யாதே!
– ஸ்ரீ அன்னை
வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே!
– டால்ஸ்டாய்
அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை!
– வள்ளலார்
அமைதியை விட மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை!
– அரவிந்தர்
அளவில்லாத ஆசை, நமது நல்ல குணங்களை அழித்து விடும்.
- மகாவீரர்
கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.
– அரிஸ்டாட்டில்
செல்வங்களின் சுமையை ஏற்றிக் கொண்டு இன்பம் எனும் செங்குத்துப் பாதையில் ஏறிச் செல்வது ஒரு மனிதனுக்குக் கடினம்.
– முகம்மது நபிகள்
பணத்தை உங்கள் தெய்வமாக்கிவிட்டால், அது சைத்தான் போல உங்களை ஆட்டிப் படைக்கும்.
- ஹென்றி ஃபீல்டிங்
சிந்தனை இல்லாத படிப்பு, பயனில்லாத உழைப்பு, படிப்பில்லாத சிந்தனை இவை மூன்றும் ஆபத்தானவை.
– ஆண்டர்சன்
மனித வாழ்வு என்பது தாமரை இலையில் உருண்டோடும் பனித்துளி போன்றது.
– தாகூர்
அதிர்ஷ்டத்தை என்றும் நம்பாதே... அது உன்னைச் சோம்பேறியாக்கும்.
– ஆதிசங்கரர்
கடினமான வேலைகளைச் செய்வதில் மகிழ்ச்சியடைபவர்களே எப்போதும் புகழ் பெறுகிறார்கள்.
– மகாகவி மில்டன்
சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு செய்தால் எந்த வேலையும் மிக்க் கடினமானதாக இருக்காது.
– ஹென்றி போர்ட்
சவால்கள் வரும்போதுதான் நீங்கள் நினைத்தே பார்த்திராத திறமைகள் உங்களிடம் ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்வீர்கள்.
– டாரா ஆல்பர்ட்
குற்றவாளி சட்டத்திற்கு அஞ்சுகிறான். நல்ல மனிதன் தன் மனசாட்சிக்கு அஞ்சுகிறான்.
– உய்கோ
கடுமையாக உழைப்பவனுக்குக் கவலைப்பட நேரமில்லை!
– சாணக்கியர்
வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் தேடி ஓடும் போதுதான், நாம் கால்கள் இடறி விழுந்துவிடுகிறோம்.
– ஷேக்ஸ்பியர்
மனிதன் தோல்வியின் மூலமே மேலும் புத்திசாலி ஆகின்றான்.
– விவேகானந்தர்
மன்னிக்கும் உள்ளத்தில் கடவுள் குடியிருக்கின்றார்.
– குருநானக்
தேவைப்படும்போது தன் முடிவை மாற்றிக் கொள்ளத் தெரிந்தவன்தான் அறிவாளி.
– டாக்டர் ஜான்சன்
நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே.
- ஜார்ஜ் எலியட்
நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.
– கன்ஃபூஷியஸ்
தேவைக்கு மேலுள்ள பொருள் தேவையில்லாதவற்றை வாங்கவே பயன்படும்.
- தோரோ
ஒரு துளி மையினால் எழுதும் கருத்துக்கள் ஓராயிரம் பேரைச் சிந்திக்க வைக்கும்.
– வால்டேர்
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.