* கடவுள் முக்காலத்திற்கு அப்பாலும் இருப்பார்.
* கடவுளிடம் பிரார்த்தனை செய், அவருக்குச் சலிப்பே கிடையாது.
* காய்ந்த மரம் கீழே விழக் காத்திருக்கும் பொழுது, ஒரு பச்சை மரம் சாய்கின்றது!
* தன் உயிரைப் பற்றி அதிகமாகக் கவனமாயிருப்பவனை ஒரு சருகு விழுந்து கொன்று விடும்.
* ஆச்சரியமானதும் அற்புதமானதும் ஒரு வாரத்துக்கு வியப்பாயிருக்கும்.
* மெலிந்தவனே அரை ஆள் என்றும், பருத்தவனை இரண்டு ஆள் என்றும் கணக்கிடுவதில்லை.
* நாயைப் போன்றவள் பெண்! எலும்பைக் காட்டினால், நாய் ஏமாந்து பின்னால் வரும்.
* காதல் கட்டுப்பாடற்ற கழுதை.
* பெரிய இடத்துப் பெண்ணை விவாகம் செய்து கொண்டு, பாயில் படுத்துறங்கு.
* குட்டையான பெண்ணை மணந்து கொண்டால், துணி அதிகம் தேவையிராது.
* அத்தை மகளை விட்டுவிட்டு, வெளியில் பெண்ணெடுப்பவன் மூடன்.
* திருமணத்திற்கு முன்னால் கண்களைத் திறந்து வைத்துக் கொள், பின்னால் பாதிக் கண்ணை மூடிக்கொள்.
* மனைவிக்குச் சேலைகள் வாங்கிக் கொடுத்தால், கணவனுக்கு அமைதி கிடைக்கும்.
* உன் மனைவியிடம் ஆலோசனை கேள்; ஆனால், அவள் சொல்வதற்கு மாறாகச் செய்.
* தன் வீட்டுக்குத் திரும்பி வரும் மனிதன் தீய சகுனங்களை பொருட்படுத்த மாட்டான்.
* வீட்டுத்தலைவன் மீது வீட்டிலுள்ள எல்லோருடைய குப்பைகளும் கொட்டப்படும்.
* பெண் பிள்ளைகள் இரண்டு வார்த்தைகள் சொன்னால், ஒன்றை எடுத்துக் கொண்டு, மற்றதை விட்டுவிடு.
* கேள்விகள் கேட்கும் குழந்தை மூடக் குழந்தையன்று.
* குழந்தைகளில்லாத எலி ஆற்றோரம் வீடு கட்டிக் கொள்ளும்.
* தாயும் தந்தையும் செல்லாத பாதையில் நீ செல்ல வேண்டாம் .
* அன்னையை எவரோடும் ஒப்பிடக்கூடாது. அவள் ஈடற்றவள்.
* உதிர்ந்த இறகைப் பசை வைத்துத்தான் ஒட்டவேண்டும்.
* தாடியுள்ள வாய் பொய் சொல்லாது.
* நோயாளியின் நண்பன் அவனுடைய கட்டில்தான்.
* அனுபவமில்லாதவன் வைத்தியரைக் குணப்படுத்திவிடுவான்.
* உணவோடு சேர்த்து மருந்தைக் கொடுத்தால், நோய் குணமாகாவிட்டாலும், பசியாவது ஆறும்.
* கண்ணீர் உயிரைப் பிடித்து வைக்க முடியாது.
* எதிலும் அனுபவமில்லாதவர்களுக்கு அழுகுரலும் பாட்டாகத் தோன்றும்.
* இந்த உலகத்தில் மூன்று நண்பர்கள் இருக்கிருர்கள். தைரியம், புத்தி, நுண்ணறிவு.
* செல்வம் மூடுபனி போன்றது. நிமிடத்தில் சிதறிப்போகும்.
* தங்கச் செருப்புடன் உலகின் கடைசிவரை செல்லமுடியும்.
* பாலிலிருந்து வெண்ணெய் வருவது போல, நல்லதிலிருந்து நல்லதே விளையும்.