* நான், நீ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும்.
* மிஞ்சினால் கெஞ்சுவது எப்படி கோழைத்தனமோ; அதைப் போன்றுதான் கெஞ்சினால் மிஞ்சிகிற வீரமும் ஆகும்.
* 'முடியுமா நம்மால்' என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். 'முடித்தே தீருவோம்' என்பது வெற்றிக்கான தொடக்கம்.
* ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை, அவர் இறந்துபோன நாளிலிருந்து கணக்கிட்டு தெரிந்துகொள்ளலாம்.
* பாராட்டும் புகழும் குவியும் போது, குட்டையான வாசலுக்குள் குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும்.
* ஒளியில்தான் நமது நிழலின் வடிவம் நமக்குத் தெரிகிறது. சோதனையில்தான் நமது நெஞ்சின் வலிமை நமக்குப் புரிகிறது.
* புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்… உலகத்தையேப் புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்.
* குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும்... கூர்வாளைக் கூர்வாளால் சந்திக்க வேண்டும்…
* தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை.
* ஆசைகள் சிறகு ஆகலாம். அதற்காக, கால்களை இழந்துவிட்டுப் பறந்தால் பூமிக்குத் திரும்ப முடியாது.
* உயிரைக் குடிக்க வந்த எதிரியே ஆயினும், உரிய மரியாதை அளிப்பதுதான் தமிழ் மண்ணுக்குச் சொந்தமான பண்பாடு.
* அதிகார வர்க்கம், முள் நிறைந்த ரோஜாவாக இருக்கலாம். முள்ளம்பன்றியாக சிலிர்த்துக் காட்டக்கூடாது.
* ஒரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்துக் கொண்டு, ஆயிரம் விளக்குகளை ஏற்ற முடியும். அறிவொளி பெற்ற ஒரு பெண்ணாலும் அது முடியும்.
* உண்மையை மறைக்க முனைவது, விதையைப் பூமிக்குள் மறைப்பது போலத்தான்.
* துணிவிருந்தால் துக்கமில்லை… துணிவில்லாதவனுக்குத் தூக்கமில்லை… ஓயாமல் உழைத்த ஒரு தமிழன் இங்கே ஓய்வெடுத்துக் கொள்கிறான் என்று என் கல்லறையில் எழுதப்பட வேண்டும்.
* அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது.
* தோழமையின் உயிர்த்துடிப்பே, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில்தான் இருக்கிறது.