நேரம் குறித்த பொன்மொழிகள்
கடவுளுக்கு அடுத்தபடியாக நேரத்தை மதித்தல், ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும்.
- லவேட்டர்
நான், எனக்குக் குறித்த நேரத்திற்குக் கால் மணி நேரம் முந்தியே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியுள்ளது.
- நெல்சன்
காலமே உனது உயிராகும். அதனை வீணாக்குவது, உன்னை நீயேக் கொலை செய்வதற்கு ஒப்பாகும்.
- ஜேம்ஸ் லேன்
காலத்தின் மதிப்பு உனக்குத் தெரியுமா? அப்படியானால் உனக்கு வாழ்வின் மதிப்பும் தெரியும்!
- நெல்சன்
எவருக்கும், உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோக் கிடைப்பதில்லை.
- பென்னார்ட்
நேரந்தான் நமக்கு மிக அவசியமான தேவை.
- பென்
நேரத்தை முறையாக வகுத்துக்கொள்ள வேண்டும்.
- பிட்மன்
நேரம் என்பது தங்கம் போல் மதிப்புள்ளது.
- ஜே. மேஸன்
நாம் நமது நேரத்தைச் செலவிடும் விதம், நாம் யார் என்பதை வரையறுக்கிறது.
- ஜோனதன் எஸ்ட்ரின்
நேரம் இலவசமானது, ஆனால் அது விலைமதிப்பற்றது. உங்களால் அதைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியாது. ஆனால், உங்களால் அதைப் பயன்படுத்த முடியும். உங்களால் அதை வைத்திருக்க முடியாது. ஆனால், உங்களால் அதைச் செலவிட முடியும். நீங்கள் ஒருமுறை அதை இழந்தால், அதை உங்களால் திரும்பப் பெற முடியாது.
- ஹார்வி மேக்கே
பொறுமையும் நேரமும் மிகவும் சக்தி வாய்ந்த இரண்டு போர்வீரர்கள்.
- லியோ டால்ஸ்டாய்
ஒரு மனிதனால் செலவிடக் கூடிய மிகவும் மதிப்பு மிக்க விடயம் நேரம்.
- தியோபிராஸ்டஸ்
உங்கள் ரோஜாவுக்காக நீங்கள் செலவழித்த நேரமே, உங்கள் ரோஜாவை மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது.
- அந்துவான் து செயிந் தெகுபெறி
சிக்கல் என்னவென்றால், உங்களுக்கு நேரம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்.
- ஜாக் கோர்ன்ஃபீல்ட்
உங்கள் 24 மணிநேரத்தை மாற்றினால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றுவீர்கள்.
- எரிக் தாமஸ்
காலம் விடயங்களை மாற்றுகிறது என்று அவர்கள் எப்போதும் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் நீங்கள்தான் அவற்றை மாற்ற வேண்டும்.
- ஆண்டி வார்ஹோல்
நேரம் என்பது ஒரு மாயை.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
நேரம் என்பது இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள மிக நீண்ட தூரம்.
- டென்னசி வில்லியம்ஸ்
நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
- ஜே. ஆர். ஆர். டோல்கீன்
நாம் நேரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். ஊன்றுகோலாக அல்ல.
- ஜான் எஃப். கென்னடி
ஒரு நிமிடம் தாமதமாகச் செல்வதை விட, மூன்று மணிநேரம் முன்கூட்டியே செல்வது சிறந்தது.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
தவறவிட்ட நேரத்தை திரும்பப் பெறமுடியாது.
- பெஞ்சமின் பிராங்க்ளின்
ஒரு மணி நேரத்தை வீணடிக்கத் துணிந்த ஒரு மனிதன், வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன்.
- சார்லஸ் டார்வின்
எங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற வளம் நேரமாகும்.
- ஸ்டீவ் ஜாப்ஸ்
பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும் கொடுப்பதை விட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது.
- நெல்சன் மண்டேலா
உண்மையில் எந்தவொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரே மூலதனம் நேரம் தான். மேலும், அவன் இழந்தால் பெற முடியாத ஒரே விடயம் நேரம்.
- தாமஸ் ஆல்வா எடிசன்
நேரம் என்பது ஒரு சிறந்த எழுத்தாளர். அது எப்போதும் சரியான முடிவை எழுதுகிறது.
- சார்லி சாப்ளின்
நேரம் தடையின்றிச் செல்கிறது. நாம் தவறு செய்யும் போது, கடிகாரத்தைத் திருப்பி மீண்டும் முயற்சிக்க முடியாது. நம்மால் செய்யக்கூடியது நிகழ்காலத்தை நன்றாகப் பயன்படுத்துவதுதான்.
- தலாய் லாமா
வேலை செய்வதற்கு ஏற்ற மிகவும் அமைதியான நேரம் இரவு. இது சிந்தனைக்குத் துணை புரிகிறது.
- அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
நேரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கும்.
- லியோனார்டோ டாவின்சி
நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் நேரம் தாமதிக்காது.
- பெஞ்சமின் பிராங்க்ளின்
இழந்த செல்வத்தை உழைப்பால் திரும்பப் பெறலாம். இழந்த அறிவைப் படிப்பால் திரும்பப் பெறலாம். இழந்த ஆரோக்கியத்தைப் பத்தியம் அல்லது மருத்துவத்தால் திரும்பப் பெறலாம். ஆனால், இழந்த நேரம் என்றென்றும் இழந்ததுதான்.
- சாமுவேல் ஸ்மைல்ஸ்
உங்கள் நேரத்திற்கு ஒரு வரையறை உண்டு. ஒவ்வொரு கணத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்.
- மார்கஸ் அரேலியஸ்
நாம் சொல்வதிலும், செய்வதிலும் பெரும்பாலானவை அவசியமற்றவை. உங்களால் அதைத் தவிர்க்க முடிந்தால், உங்களுக்கு அதிக நேரமும், அதிக அமைதியும் கிடைக்கும். ஒவ்வொரு கணமும் "இது அவசியமானதா" என்று உங்களை நீங்களேக் கேட்டுக் கொள்ளுங்கள்.
- மார்கஸ் அவுரேலியஸ்
நேரம் என்பதுதான் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படிச் செலவு செய்ய வேண்டுமென்ற உரிமை உங்களுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய அந்த செல்வத்தை மற்றவர்கள் ஏமாற்றித் தங்களுடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து, ஏமாந்துவிடாதீர்கள்.
- கார்ல் லேண்ட்பர்க்
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.