நோயே ஒரு வைத்தியன்
- ஜெர்மனி
நோயைப் போற்றி வைப்பவனிடம் அது உறவு கொண்டாடும்
- ஜெர்மனி
நோயாளியிடம் பணம் இருப்பதற்குத் தக்கபடி பிணி நீடிக்கும்
- ஜெர்மனி
உடலுக்கு நோய் வந்தால், மனத்திற்கு வந்து விடும்
- போஸ்னியா
ஆஸ்துமா வந்தவர் நெடுநாள் வாழ்வர்
- அயர்லாந்து
முகத்தில் ஒரு பரு வந்து விட்டால் உடலுக்குள் சயித்தான் புகுந்த மாதிரி
- அயர்லாந்து
ஒவ்வொரு பிணியும் ஒரு வைத்தியன்
- அயர்லாந்து
நீடித்த நோய்களுக்குப் பொறுமைதான் மருந்து
- அயர்லாந்து
வரட்சியான இருமல் வந்து விட்டால், எல்லா நோய்களும் தீர்ந்து விடும்
- வேல்ஸ்
மூக்கின் மேல் பரு வந்தால், அது ஆளை மறைத்துவிட்டுத் தானே முன்னால் தெரியும்
- பல்கேரியா
ஆரோக்கியத்தின் அருமையை நோயில்தான் அறியலாம்
- ஹங்கேரி
ஈக்கும் இருமலுண்டு
- இத்தாலி
நோயாளி எதுவும் பேசலாம்
- இத்தாலி
நோயின் கசப்பிலிருந்துதான் மனிதன் ஆரோக்கியத்தின் இனிமையை அறிகிறான்
- கடலோனியா
நோயாளியின் நண்பன் அவனுடைய கட்டில் தான்
- ஆப்பிரிக்கா
நோயைக் கண்டுபிடித்தலே ஆரோக்கியத்திற்கு ஆரம்பம்
- ஸ்பெயின்
நோயின் தந்தை எவனாயிருந்தாலும், தாய் உணவுக் கோளாறுதான்
- இங்கிலாந்து
வரும்போது நோய் குதிரை மேல் வரும், நீங்கும் போது நடந்து செல்லும்
- இங்கிலாந்து
காலந்தோறும் நோயும் மாறுகின்றது
- இங்கிலாந்து
தடுமனுக்கு உணவு, காய்ச்சலுக்குப் பட்டினி
- இங்கிலாந்து
பிணியே வராதவன் முதல் வகுப்பிலேயே இறந்து போவான்
- இங்கிலாந்து
நோயாளியின் அறை பிரார்த்தனைக் கூடம்
- இங்கிலாந்து
கோழிக்கு ஊசிப்புண் போதும்
- இந்தியா
எப்பொழுதும் நோயுள்ளவனுக்குப் பெயர் ஆரோக்கியசாமி
- இந்தியா
முதல் சாமத்தில் எல்லோரும் விழித்திருப்பர், இரண்டாவதில் போகி விழித்திருப்பான். மூன்றாவதில் திருடன் விழித்திருப்பான், நான்காவதில் நோயாளி விழித்திருப்பான்
- இந்தியா
நோய் வந்து விட்டால் எந்த வைத்தியரையாவது அழை
- சீனா
வெளிச்சம் வருகிற சாளரத்தை அடைத்தல் வைத்தியர் வருவதற்குக் கதவைத் திறத்தலாகும்
- சீனா
வயிற்றுப் பக்கம் நோயில்லையானால் நோயாளி இறக்க மாட்டான்
- சீனா
புண்ணும் கட்டியும் எங்கு வேண்டுமானாலும் உண்டாகும்
- ஜப்பான்
பிணி ஒவ்வொரு மனிதனுக்கும் எஜமானன்
- டென்மார்க்
நோயுற்ற காலங்களில் ஆன்மா தன் வலிமையைச் சேர்த்துக் கொள்கின்றது
- லத்தீன்
நோய் வந்தவுடனேயே அதைக் கவனிக்க வேண்டும்
- லத்தீன்
நோயை மறைத்தல் அபாயம்
- லத்தீன்
நோய் நாம் யார் என்பதைக் காட்டுகின்றது
- லத்தீன்
நோயாளிக்கு தேனும் கசக்கும்
- ரஷ்யா
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.