* பிள்ளையார் சுழி போட்டாச்சா?
* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
* பிள்ளையாருக்கு எப்போ கல்யாணம்?
* எள்ள வெல்லப் பிள்ளையாரா?
* கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல
* பிள்ளையாரைப் பிடித்த சனியன், அரசமரத்தையும் சேர்த்துப் பிடித்தது போல
* பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது.
* பிள்ளையார் அப்பா, பெரியப்பா, பிழைக்கும் வழியைச் சொல்லப்பா
* பிள்ளையார் குட்டுக் குட்டி ஆயிற்று
* பிள்ளையார் கோயில் பெருச்சாளி போல
* பிள்ளையார் கோயிலில் திருடன் இருப்பான்
* பிள்ளையார் கோயிலைப் பெருக்கலாம்; மெழுகலாம்; அமேத்தியம் விடித்தால் கண் போய் விடும்.
* பிள்ளையார் சதுர்த்திக்கும் மீராசாயபுவுக்கும் என்ன சம்பந்தம்?
* பிள்ளையார் பிறகே திருடன் இருக்கிறான்; சொன்னால் கோளாம்.
* பிள்ளையார் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க விடமாட்டான்.
* பிள்ளையாருக்குக் கல்யாணம் நடக்கிறபோது பார்த்துக்கலாம்.
* பிள்ளையாருக்குப் பெண் கொள்வது போல
* பிள்ளையாரைக் கண்டால் தேங்காயைக் காணோம்; தேங்காயைக் கண்டால் பிள்ளையாரைக் காணோம்.
* பிள்ளையாரைச் சாக்கிட்டுப் பூதம் விழுங்கிற்றாம்
* பிள்ளையாரைச் சாக்கு வைத்துப் பூசாரி போட்டாற்போல
* பிள்ளையாரைப் பிடித்த சனி அரசமரத்தைப் பிடித்தது போல