* பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு.
* மனம் சுத்தமாக இருந்தால் செயல் நல்ல வழியில் செல்லும்.
* அனைவரையும் நேசி, சிலரை மட்டும் நம்பு, ஒருவரைப் பின்பற்று, ஆனால் ஒவ்வொருவரிடம் இருந்தும் கற்றுக்கொள்..!
* பிறரிடம் நீ எந்த குணத்தை வெறுக்கிறாயோ. அந்த குணத்தை உன்னிடம் வைத்துக் கொள்ளாதே.
* நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே. நீ விரும்புவதை உலகமே எதிர்த்து நின்றாலும் செய்து முடி.
* எல்லோரையும் திருப்திப்பட வைக்க நினைப்பவனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.
* தவறுகளை ஒத்துக் கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்தி கொள்வதற்கான வலிமையும் தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்.
* நீ கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட. இலட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து. உலகம் உன்னைப் போற்றும்.
* உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்..!
* அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது.
* மத ஒழுக்கநெறி என்ற சொற்தொடர் தான் மக்களை இன்னும் ஏமாற்றிக் கொண்டு ஏமாளிகளாக வைத்திருக்கிறது.
* உழைத்து உழைத்து உருக்குலைந்து போன மக்களை, மேல் எழும்பிவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே: மதமும், கடவுளும்.
* உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்.
* மக்கள் புரட்சி எப்படி உருவாகும்..? மக்கள் இனி வாழ வழியில்லை என்று எண்ணும் போது புரட்சி வெடிக்கும்..!
* புரட்சிப் பாதையில் கை துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள், புத்தகங்களே...!