* ஆசைகள் சிறகு ஆகலாம்; அதற்காகக் கால்களை இழந்துவிட்டு பறந்தால் பூமிக்குத் திரும்ப முடியாது.
* மிஞ்சினால் கெஞ்சுவது எப்படி கோழைத்தனமோ; அதைப் போன்றுதான் கெஞ்சினால் மிஞ்சிகிற வீரமும் ஆகும்.
* ஒளியில்தான் நமது நிழலின் வடிவம் நமக்குத் தெரிகிறது; சோதனையில்தான் நமது நெஞ்சின் வலிமை நமக்குப் புரிகிறது.
* புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்.
* குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும்; கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும்.
* தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப்போல் ஓர் உண்மையான நண்பனும் இல்லை.
* பாராட்டும் புகழும் குவியும்போது குட்டையான வாசலுக்குள், குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும்.
* ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தினால், அதைக்கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்ற முடியும். அறிவொளி பெற்ற ஒரு பெண்ணாலும் அது முடியும்.
* உண்மையை மறைக்க முனைவது, விதையை பூமிக்குள் மறைப்பது போலத்தான்..!
* உண்மையானவனின் பின்னால் ஐந்து பேர் செல்வார்கள்; அந்த உண்மையைப் புரியாதவன் பின்னாலும் ஐந்து பேர் செல்வார்கள்.
* மோதிக்கொள்வது என்பது சாதாரணமான விடயம் தான்... ஆனால் அதனால் ஏற்படுகிற பலன், விளைவு என்ன என்பதுதான் மிக முக்கியமான விடயம்.
* நம் நாட்டில் இப்போது நடந்து காட்டுகிறவர்களை விட, நடித்து காட்டுபவர்கள்தான் அதிகம்.
* பழியுணர்வு மட்டுமே வாழ்க்கை எனக் கொண்டவர்கள், பகைவர் இல்லாமலே தமக்குத்தாமே குழி வெட்டிக்கொள்வார்கள்.
* சிரிக்கத் தெரிந்த மனிதன்தான் உலகத்தின் மனிதத் தன்மைகளை உணர்ந்தவன்.
* தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை.
* அணு அளவு கூட இதயமில்லா ஒருவருக்கு ஆகாயம் அளவு மூளையிருந்து என்ன பயன்...?
* அனுபவம் ஒரு பள்ளிக்கூடம் ஆனால் அதில் ஆணவக்காரர்கள் கற்று தேர்வதில்லை.
* கூடவே இருந்து இழிவு செய்யும் நண்பர்களை விட, எதிரில் எதிர்த்து நிற்கும் எதிரி எவ்வளவோ மேல்.
* தோழமையின் உயிர்த் துடிப்பே துன்பத்தை பகிர்ந்து கொள்வதில்தான் இருக்கிறது.
* 'முடியுமா நம்மால்' என்பது 'தோல்வி'க்கு முன்பு வரும் தயக்கம். 'முடித்தே தீருவோம்' என்பது 'வெற்றி'க்கான தொடக்கம்.
* அதிருப்தியாளர்கள் வளரவளர, அவர்களின் மத்தியிலே அவர்களை நடத்திச் செல்லும் தலைவன் ஒருவன் தோன்றி விடுவான்.
* வீரன் சாவதே இல்லை... கோழை வாழ்வதே இல்லை...